மக்களை களத்தில் சந்திக்க தயாரான 'பிக்பாஸ்' போட்டியாளர் விக்ரமன்

vikraman first video after bigg boss 6- ‘அறம் வெல்லும்’ என்பதை வாழ்க்கை தாரகமாக கொண்டுள்ள ‘பிக்பாஸ்’ போட்டியாளர் விக்ரமன், விரைவில் மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக, வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மக்களை களத்தில் சந்திக்க தயாரான பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன்
X

vikraman first video after bigg boss 6- ‘இன்ஸ்டாகிராம்’ வீடியோ மூலம் ரசிகர்களிடம் பேசிய ‘பிக்பாஸ்’ போட்டியாளர் விக்ரமன்.

vikraman first video after bigg boss 6, Vikraman's First Video After The Grand Finale- பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார், அதனால் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால், பல ரசிகர்கள் அசீமிற்கு இந்த வெற்றி தகுந்தது அல்ல, விக்ரமனுக்கு கிடைத்திருக்க வேண்டியது, இது சரியான முடிவு இல்லை என்று கூறி வருகின்றனர்.


இந்நிலையில், மக்களின் மனதை கவர்ந்த போட்டியாளரான விக்ரமன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் முதன்முறையாக இன்ஸ்டாவில் பேசி விக்ரமன் பகிர்ந்துள்ள வீடியோ அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தினமும் சராசரியாக 30 லட்சம் பேர் வரை பார்த்து ரசிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, 105 நாள்களைக் கடந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று முன் தினம் (ஜன.22) அதன் க்ரான்ட் பினாலேவை எட்டியது. இந்த ரியாலிட்டி ஷோவில் இறுதிவரை சிறப்பாக விளையாடிய விக்ரமன்தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் குறைவான வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது அவரது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


சின்னத்திரை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பத்திரிகையாளர், அரசியல் என பல துறைகளிலும் பயணித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த விக்ரமன், தொடக்கம் முதலே தன் கனிவான பண்பாலும் தெளிவான பேச்சாலும் கவனம் ஈர்த்தார்

விளையாட்டில் சுய மரியாதையை இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது, கண்ணியம் பேண வேண்டும், என்பது தொடங்கி, எப்படிப்பட்ட சண்டைகளிலும் தன்னிலை மறக்காமல், சரியான கருத்துகளை உரக்கச் சொல்லி தன் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளாமல் மக்களின் குட் புக்ஸில் இடம்பெற்றார் விக்ரமன். ஆனால், இறுதியில் நூலிழையில் டைட்டிலை தவறவிட்டு இரண்டாம் இடம்பிடித்தது அவரது ரசிகர்களை அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.


பிக் பாஸில் தொடக்கம் முதலே கட்டுப்பாடின்றி கோபத்தை வெளிப்படுத்தி, வாராவாரம் கமல் அறிவுரை சொல்லுமளவுக்கு நெகட்டிவ் இமேஜை முன்னிறுத்தி விளையாடி வந்த அஸீம், டைட்டில் வென்றது நெட்டிசன்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் 'அறம் வெல்லும்' என அழுத்தமாகக்கூறி நேர்மையை முன்னிறுத்தி விளையாடிய விக்ரமன் வெற்றி பெறாதது இணையதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல் வரை நெட்டிசன்களின் வசவுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் முதன்முறையாக விக்ரமன் தன் ரசிகர்களுடன் உரையாடும் வகையில் வீடியோ பகிர்ந்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

"வணக்கம், உங்க எல்லாருக்கும் நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். நீங்க எல்லாரும் எவ்வளவு ஆதரவு காமிச்சிங்கனு வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம் தான் என்னால உணர முடிஞ்சது. அவ்வளவு அன்பும் ஆதவும் ரொம்ப ஆர்கானிக்கா, தன்னெழுச்சியா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம காமிச்சிருக்கிங்க. அதுக்கு மிகப்பெரிய நன்றி. பொங்கல் அன்னைக்கு உங்க வீட்டு வாசல்கள்ல போட்ட கோலத்துல 'அறம் வெல்லும்' இடம்பெற்றிருக்கு. இதவிட பெரிய வெற்றி வேற என்ன நீங்க எனக்கு கொடுத்துட முடியும்?


நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். உங்களுடைய அன்புக்கு மிகப்பெரிய நன்றியை நான் தெரிவிச்சிக்க கடமைப்பட்டிருக்கேன். இருந்தாலும் உங்க மனநிலை என்னனு தெரியுது. நாம பேசுவோம். இந்த வீடியோ நன்றி தெரிவிக்கறதுக்காக மட்டுமல்ல. நான் உங்க எல்லாரையும் சந்திக்கணும்னு ஆசைப்படறேன். அந்த மீட் எங்க, எப்படிங்கறத நான் அதிகாரப்பூர்வமா தெரிவிக்கறேன். மறுபடியும் சொல்றேன்.... உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அறம் வெல்லும்!"

இவ்வாறு பேசியுள்ளார் விக்ரமன்.

இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.

Updated On: 25 Jan 2023 6:49 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...