/* */

வாரிசு படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்: திட்டமிட்டபடி ரிலீசாகுமா?

Varisu Movie Release in Trouble -நேரடி தெலுங்கு படத்திற்கு மட்டுமே பொங்கல் ரிலீசுக்கு முக்கியத்தும் தர வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

வாரிசு படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்: திட்டமிட்டபடி ரிலீசாகுமா?
X

Varisu Movie Release in Trouble -தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், யோகி ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு திரையுலகில் மிகப் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆவார். இதுவரை இவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் தயாரிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அதே பொங்கல் பண்டிகைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் வாரிசு படத்தின் போட்டியாக அஜித்தின் துணிவு படம் வெளியாக இருக்கிறது. தெலுங்கு திரை உலகில் பொங்கல் பண்டிகை ஒட்டி தெலுங்கு முன்னணி நடிகர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில், வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் நடந்தது. அதில் தில்ராஜு கலந்துகொண்டு, பொங்கல் மற்றும் தசரா தில்ராஜு போது அதிக அளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது. நேரடி தெலுங்கு படத்திற்கு வாய்ப்புகள் கிடைக்க திரையரங்கு ஒதுக்கப்படுவதில்லை. இதனால் தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். மிச்சம் இருக்கும் திரையரங்கில் தான் டப்பிங் படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

2017 ஆம் ஆண்டு இப்படி இவர் கூறியிருந்தது தான் தற்போது சிக்கலாக உருவாகியுள்ளது. விஜயின் வாரிசு படம் முழுக்க முழுக்க தமிழ் படம் என்று அவரே பேட்டியில் கூறியிருந்தார். இப்படி இருக்கும் அவரே பொங்கல் பண்டிகை அன்று வாரிசு படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் வாரிசு படம் வெளியாகும் அதே நாளில் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வாரிசு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Nov 2022 8:33 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு