/* */

அக்கா சாயலில் அப்படியே தங்கை; விஜய் ரசிகர்கள் ஆச்சரியம்..

Vijay Sister Photo-நடிகர் விஜய் மனைவி சங்கீதாவின் தங்கை, அவரது முகச் சாயலில் இருக்கும் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

Vijay Sister Photo
X

Vijay Sister Photo

Vijay Sister Photo-தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'வாரிசு' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய் சாதாரண நடிகராக, தனது சினிமா வாழ்க்கை பயணத்தை 'ரசிகன்' படம் வாயிலாக, துவங்கினார். அதைத்தொடர்ந்து, 'செந்தூரப்பாண்டி' படத்தில், விஜய்காந்துடன், அவரது தம்பியாக நடித்து, பலராலும் கவனிக்கப்பட்டார். 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' படங்களின் மூலம், முன்னணி நடிகராக வெற்றிப்பெற்ற விஜய், 'கில்லி' படத்தின் மூலம், டாப் ஹீரோக்களில் ஒருவராக, வெற்றி பெற்றார்.

அதன்பின், 'போக்கிரி' படத்தில், விஜய், இன்னும் பலமடங்கு உச்சத்துக்கு போனார். அதன்பின்னர், விஜய் நடித்த படங்களுக்கு என தனி மவுசும், ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பையும் பெற்று வருகிறது. சமீபத்தில், பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'வாரிசு' படமும், வெற்றி பெற்றுள்ளது.

'வாரிசு' படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'தளபதி 67' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளிவந்தது. இனி வரும் நாட்களில், இப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்தும், படத்தின் ப்ரோமோ வீடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்த படத்தை ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளது. இவரது இயக்கத்தில் 'மாஸ்டர்' படம் வந்தது. இது, பெரிய அளவில் வெற்றி பெறாத போதும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது. குறிப்பாக, வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படமாகவே கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது, விஜய் நடிக்கும் 67வது படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்குவது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல், உலகநாயகன் கமல் நடித்த 'விக்ரம்' என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில், அடுத்த படமாக, விஜய் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்குவது, இன்னும் பலமடங்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தனை ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவர் குறித்து பல விதமான சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து விரைவில் விஜய் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானால் தான் அனைத்திற்கும் முடிவு கிடைக்கும்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சங்கீதாவின் தங்கை அச்சு அசல் அப்படியே சங்கீதா போலவே தோற்றமளிக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

இப்போது, விஜய் மனைவி சங்கீதாவுடன், அவரது தங்கை இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப நிகழ்ச்சிகளில், சங்கீதாவுடன் அவரது தங்கை இருக்கும் படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 4:11 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  4. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  5. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  8. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...
  9. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  10. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!