/* */

விஜய் சேதுபதியின் இந்தி பட வெளியீடு தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்

Merry Christmas Vijay Sethupathi Movie -விஜய் சேதுபதியின் முதல் இந்தி படமான 'மேரி கிறிஸ்துமஸ்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

விஜய் சேதுபதியின் இந்தி பட வெளியீடு தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்
X

Merry Christmas Vijay Sethupathi Movie -தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகராக மாறி வருகிறார். இதையடுத்து தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். தற்போது பாலிவுட்டில் கால்பதித்துள்ள விஜய் சேதுபதி இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் 'அந்தாதூன்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் 'மேரி கிறிஸ்துமஸ்' படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இப்படத்தின் பணிகள் நிறைவுபெறாததால் படத்தின் வெளியீட்டை அடுத்த ஆண்டு கோடைகாலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018ல் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் இந்தியில் வெளியான 'அந்தாதூன்' திரைப்படம் சூப்பர் ஹிட அடித்தது. மேலும், இந்தப் படம் 3 தேசிய விருதுகளையும் வென்றது. இதனை அடுத்து இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தை இயக்குகிறார். சைக்கோ திரில்லராக பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது மெர்ரி கிறிஸ்துமஸ்.

விஜய் சேதுபதியின் படம் வெளியாவது தள்ளிப்போவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸை முன்னிட்டு டைகர் ஷெராப் நடித்துள்ள 'கண்பத்', ரன்வீர் சிங் நடித்துள்ள 'சர்க்கஸ்' ஆகிய படங்கள் டிசம்பரில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், போட்டியை சமாளிப்பதற்காக மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. விஜய் சேதுபதியின் முதல் இந்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.


இன்னொரு பக்கம் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் மிரட்டிய விஜய் சேதுபதி, இப்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Nov 2022 9:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!