/* */

கமலுக்கு பதில் விஜய் சேதுபதி! தேசிய விருது வென்றவர் படத்தில் இப்படி ஒரு டிவிஸ்ட்!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகும் மாவீரன் படத்தில் இப்படி ஒரு டிவிஸ்ட்!

HIGHLIGHTS

கமலுக்கு பதில் விஜய் சேதுபதி! தேசிய விருது வென்றவர் படத்தில் இப்படி ஒரு டிவிஸ்ட்!
X

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட படம் விக்ரம். இதன் மூலம் ரஜினி, விஜய், கமல்ஹாசன் என மூன்று முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த பெருமை விஜய் சேதுபதிக்கு கிடைத்தது. இந்நிலையில் இப்போது இன்னொரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிவாஜி - எம்ஜிஆர், கமல்ஹாசன் - ரஜினிகாந்த், விஜய் - அஜித், விக்ரம் - சூர்யா என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதில் கமல் - ரஜினி இரண்டு பேரும் நிறைய படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்போதைய தலைமுறையின் எதிர்பார்ப்பு என்பது சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துவிட மாட்டார்களா என்பதுதான்.

கிட்டத்தட்ட அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறப் போகிறது. சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருக்கிறார். சொல்லப்போனால் அவர் குரல் படம் முழுக்க வரப் போகிறது. அதுமட்டுமின்றி படத்தின் இறுதிக் காட்சியின்போது அவரது கேமியோ ஒன்று வரப் போகிறது என்றும் தகவல் பரவி வருகிறது.

சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் இப்போதைய தலைமுறையில் எதிர் எதிர் நடிகர்களாக முன்னிறுத்தப்படுகிறார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் விஜய் - அஜித் அளவுக்கு வருங்காலங்களில் இவர்களின் படங்கள் அமையும் என்கிறார்கள். அதனால் இருவரும் ஒரு படத்துக்காக இணைவது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ரசிகர்களுக்கு மிகப் பெரிய டிரீட்டாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த வாரம் வெளியாக இருக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் ஒரு அசரீரீ குரலாக முதலில் கமல்ஹாசனைப் பேச கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் தொடர் படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் காரணமாக அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்திடமும் முயற்சித்திருக்கிறார்கள். அவரை படத்துக்குள் கொண்டு வர முடியாத நிலையில் இப்போது சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் குரலாக விஜய் சேதுபதியின் குரல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்காக சென்னையிலுள்ள பிரபல டப்பிங் தியேட்டரில் விஜய் சேதுபதி வாய்ஸ் குடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இணைந்து திரையில் தோன்றினால் நிச்சயம் தியேட்டரில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Updated On: 11 July 2023 5:59 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி