லோகேஷுக்காக மட்டுமே... லியோ படத்தில் விஜய் எடுத்த முடிவு!

லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே விஜய் இதனை வைக்க சம்மதித்துள்ளாராம். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முன்னாடி முடி விழுந்து கிடப்பது போல ஒரு டானாக காட்சியளித்தார் விஜய்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
லோகேஷுக்காக மட்டுமே... லியோ படத்தில் விஜய் எடுத்த முடிவு!
X

லோகேஷ் கனகராஜ் சொன்ன ஒரே காரணத்துக்காக தளபதி விஜய் லியோ படத்தில் முக்கியமான கெட்டப் சேஞ்ச் செய்திருக்கிறாராம். அது தனது தலைமுடியை மாற்றியது என்கிறார்கள். கிட்டத்தட்ட 30 வகையான ஹேர்ஸ்டைல் முயற்சி செய்து பார்த்து இந்த ஸ்டைலை ஓகே செய்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்துக்கு பிறகு இயக்கும் படம் லியோ. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது. காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது


இந்த படத்தில் விஜய்யுடன் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகியிருந்தார். அவரின் காட்சிகள் கடந்த இரு வாரங்களாக படம்பிடிக்கப்பட்டது. பின் அவரை பேக்அப் செய்து அனுப்பிவிட்டது படக்குழு. விஜய் - சஞ்சய் தத் இருவருக்கும் இடையிலான காட்சிதான் படத்தின் உச்ச காட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சஞ்சய் தத் படப்பிடிப்பு தளத்துக்கு வரும்போது லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் ஆகியோர் அவரை வரவேற்றனர். விஜய்யுடன் அவர் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதில் விஜய் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் இருந்தார். இந்த ஸ்டைல் லோகேஷ் கனகராஜே கேட்டு வாங்கி ஸ்டைலாம்.


லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே விஜய் இதனை வைக்க சம்மதித்துள்ளாராம். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் முன்னாடி முடி விழுந்து கிடப்பது போல ஒரு டானாக காட்சியளித்தார் விஜய்.

காஷ்மீரில் விஜய், திரிஷா உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன், விஜய், கௌதம் மேனன், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆகியோர் கேங்க்ஃபயரில் இசை நிகழ்ச்சியோட நிற்கும் புகைப்படம் ஒன்று லோகேஷ் கனகராஜால் பகிரப்பட்டது. சில நொடிகளில் சமூக வலைத்தளங்கள் முழுக்க பரவி வைரலானது. இப்போது வரை பல புகைப்படங்கள் இதுபோல வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் மொத்தம் 500 பேர் படப்பிடிப்பில் பணி செய்து வருகின்றனராம்.

நேரடியாக படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள், துணை நடிகர், நடிகைகள், நடன அமைப்பு, சண்டைப் பயிற்சி என இவர்கள் மட்டுமே 100 பேருக்கும் அதிகமாக இருக்கிறார்களாம். மேலும் சில சண்டைக் காட்சிகளுக்கு கூட்டமாக வரும் துணை நடிகர்களும் வருகிறார்களாம். மேலும் லைட் மேன்களிலிருந்து, அனைவரது அஸிஸ்டன்ட், படக்குழுவில் இருப்பவர்கள் 500 பேர் வரை ஒரே நேரத்தில் சாப்பிடுகிறார்களாம்.


காலை 10.30 மணிக்கு அனைவரையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் முன்னணி நடிகர், நடிகையர்கள் வந்துவிட ஷூட்டிங் துவங்குமாம். பின் 3.30, 4 மணிக்கெல்லாம் பேக் அப் சொல்லி விடுகிறார்கள். நடிகர், நடிகைகள் கிளம்பியவுடன் மற்ற பணியாளர்கள் அடுத்த 1 மணி நேரத்தில் கிளம்புகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக தயாரிப்பாளருக்கு ஒரு நாளைக்கு 75 லட்சம் ரூபாய் செலவு ஆகிறதாம். இப்படி நாளுக்கு நாள் பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு முடிந்த நிலையில், இனி விஜய், திரிஷா காட்சிகளும் விடுபட்ட மற்ற காட்சிகளும் எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Updated On: 18 March 2023 12:59 PM GMT

Related News