மும்முரமாக நடைபெறும் லியோ ஷூட்டிங்! பைக்கில் ஸ்டண்ட் செய்யும் விஜய்!

மும்முரமாக நடைபெறும் லியோ ஷூட்டிங்! பைக்கில் ஸ்டண்ட் செய்யும் விஜய்!

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மும்முரமாக நடைபெறும் லியோ ஷூட்டிங்! பைக்கில் ஸ்டண்ட் செய்யும் விஜய்!
X

தளபதி 67 லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழுவிலிருந்து அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ரசிகர்களும் விஜய்யின் இதுவரை பார்க்காத புகைப்படங்களை பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது விஜய் பைக் ஸ்டண்ட் செய்யும் புகைப்படம் ஒன்று வைரலாகிறது.

தளபதி விஜய், வம்சி இயக்கத்தில் கடைசியாக நடித்து வெளியே வந்த படம் வாரிசு. இந்த படத்தில் சரத்குமார் மகனாக நடித்திருந்தார் விஜய். மூழ்கப் போகும் தொழிலை தனது சாதுர்யத்தால் தூக்கி நிறுத்தும் வகையில் ஒரு பிசினஸ் பாஸ்ஸாக நடித்திருந்தார் விஜய். இந்த படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் படம் வசூல் மழை பொழிந்தது.

இந்நிலையில், வாரிசுக்கு முன்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் விஜய் செய்யும் ஒரு சாகசம் இப்போது புகைப்படமாக சுற்றிக் கொண்டிருக்கிறது.


என்னதான் வாரிசு படம் பயங்கர வசூல் நிலவரத்தைக் கொண்டிருந்தாலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்துக்குதான் உண்மையில் அதி பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. உண்மையில் இவர்கள் இருவரும் எப்போது சேர்வார்கள், எப்போது ஷூட்டிங் என்பது தொடங்கி படத்தில் யார் யார் இருக்கிறார்கள் யார் யாருடன் சேர்ந்து நடிப்பார்கள் யாருக்கெல்லாம் ஸ்க்ரீன் ஷேரிங் இருக்கிறது என பலரும் விவாதித்து வருகிறார்கள்.

யூடியூப்பை திறந்தாலே இதுகுறித்த பேச்சுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறது. சரி நாமும் விசாரணையைப் போட்டோம். அதில் லியோ படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என துலாவி கேட்ட போதும் எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை. காரணம் லோகேஷ் கனகராஜ் குழு எந்த ரகசியத்தையும் வெளியில் விடக் கூடாது என மிகவும் கட்டுப்பாடோடு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில கோலிவுட் செய்தியாளர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த படத்தில் விஜய்யுடன் பஹத் பாசில் இணைகிறார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. மேலும் சூர்யாவும் இந்த படத்தில் சில காட்சிகள் நடிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

சூர்யாவும் விஜய்யும் ஒரே திரையில் வந்தால் திரையரங்கே அதிரும். ஆனாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. சூர்யாவும் விஜய்யும் சம காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில், விஜய்யுடன் நடிக்க சூர்யாவும், சூர்யாவை தன் படத்தில் நடிக்க வைக்க விஜய்யும் ஒப்புக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.

முன்னதாக படத்தில் யார் யார் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் மன்சூர் அலிகான், கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின் ஆகியோர் பெயர் உறுதி செய்யப்பட்டது. முக்கிய வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் நடிக்கும் படப்பிடிப்பு காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதன்பின்னர் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் காட்சிகள் காஷ்மீரில் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டதாம். கடைசியாக சஞ்சய் தத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில வாரங்கள் காஷ்மீரில் இருக்கும் லியோ படக்குழு மிச்சமுள்ள காட்சிகளை படமாக்குகிறார்களாம்.

Updated On: 19 March 2023 4:48 AM GMT

Related News

Latest News

 1. வேலைவாய்ப்பு
  ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
 2. சோழவந்தான்
  ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
 3. திருப்பரங்குன்றம்
  மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
 4. தேனி
  தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
 5. பவானிசாகர்
  ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
 6. இந்தியா
  36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
 7. சினிமா
  கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
 8. குமாரபாளையம்
  கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்
 9. இந்தியா
  மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் ஆதார் அட்டை: மத்திய அரசு
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் பற்றிய கலந்துரையாடல்...