தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ!

தற்கொலை செய்யக்கூடாது என விஜய் ஆண்டனி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ!
X

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனியின் தந்தை அவரது 7 வயதில் தற்கொலை செய்துகொண்டதாக பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பலருக்கும் ஊக்கம் தரும் வகையில் அந்த பேச்சு அமைந்துள்ளது.


தற்கொலை செய்ய கூடாது..தற்கொலை செய்யவே கூடாது என்று அழுத்தமாக பேச்சைத் தொடங்கும் விஜய் ஆணடனி, அதுவும் தான் வாங்காத கடனுக்காக ஒருத்தர் தற்கொலை செய்யவே கூடாது என்று கூறியுள்ளார். உண்மையிலேயே அந்த குழந்தைங்கள நினைக்கும்போது தனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று கவலைப்பட்ட அவர், தன்னுடைய தந்தை இறந்த விசயத்தையும் கூறுகிறார்.

தனது தந்தை தற்கொலை செய்து கொண்ட போது தனக்கு 7 வயது என்றும் அவரது தங்கைக்கு 5 வயசு என்றும் பேசிய அவர், அந்த தற்கொலைக்கு பிறகு தனது அம்மா இரண்டு குழந்தைகளை எப்படி வளர்த்தார்கள் என்பது குறித்தும் பேசியிருந்தார்.

விஜய் ஆண்டனி பேசியது:

தற்கொலை செய்ய கூடாது..தற்கொலை செய்யவே கூடாது.. அதுவும் தான் வாங்காத கடனுக்காக ஒருத்தர் தற்கொலை செய்யவே கூடாது.

உண்மையிலேயே அந்த குழந்தைங்கள நினைக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

என்னுடைய தந்தை தற்கொலை செய்து கொண்டார். அப்போது எனக்கு 7 வயசு என் தங்கைக்கு 5 வயசு. என்ன காரணம் ஏதுலாம் எங்களோட பர்சனல் விசயம் அத சொல்லணும்னு இல்ல அது உங்களுக்கு தேவையும் இல்ல.. பெரிய விசயம் ஒன்னும் இல்ல.

அந்த தற்கொலைக்கு அப்றம் எங்க அம்மா ரெண்டு குழந்தைகளோட எவ்ளோ கஷ்டப்பட்டாங்க வாழ்க்கைல அப்படிங்குறத நான் வந்து.... அந்த வலி எனக்கு ரொம்ப அதிகம்.

நா அமைதியா இருக்கேன் அழுத்தமா இருக்கேன் நிறைய விசயங்கள் பேச மாட்றேன்னா நா அவ்ளோ பாத்துட்டேன் எனக்கு அவ்ளோ விசயம் தெரியும்.. லைஃப் எவ்ளோ வலி மிகுந்ததுனு தெரியும்.

பேசத் தெரியாம நா அமைதியா இல்ல எனக்கு பேசத் தெரியும்.

என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.


இன்னொரு வீடியோவில் ஏழை பணக்காரன், மன அமைதி, வாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்யவேண்டும் என்பதை சுருக்கமாக பேசியுள்ளார்

அவர் இங்கு யாருக்குமே ஒன்னுமே தெரியாது. பணக்காரனுக்கும் ஏழைக்கும் பிச்சக்காரனுக்கும் பைத்தியக்காரனுக்கும் யாருக்கும் ஒன்னும் தெரியாது.

அவனுக்கு தெரிஞ்சிடிச்சி அவன் இப்படி இருக்கான் இவன் அப்படி இருக்கான்னு யோசிச்சி யாரையும் கம்பேர் பண்ணாம, எல்லாருமே வந்து தன்னோட பிரச்னைகள ஃபேஸ் பண்ணனும் சால்வ் பண்ணனும்

இந்த உலகத்துல யாருக்குமே ஒன்னுமே தெரியாது. எவ்ளோ பணம் வச்சிருந்தாலும் எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அவனும் நீயும் ஒன்னுதான்றத முதல்ல புரிஞ்சிக்கணும்.


இருக்கக்கூடிய எடத்துல இருந்து மனசுல அமைதியோட எதாவது ஒன்னு பண்ணு அதுதான் சந்தோஷம்னு நினைக்கிறேன்

என்று அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.

விஜய் ஆண்டனி எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு ஐகானாக திகழ்பவர். காரணம் அவரது பாடல்கள் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் அவரது பேட்டிகளும் மிகவும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஊக்கப்படுத்தும் வகையிலான சொற்களை அவர் எப்போதும் பயன்படுத்துவார். அவரின் வீடியோக்கள் எப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும்.

Updated On: 19 Sep 2023 10:15 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
 3. குமாரபாளையம்
  அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
 5. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
 7. தென்காசி
  தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
 8. சினிமா
  நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
 9. தென்காசி
  தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
 10. ஆலங்குளம்
  மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை