/* */

7வது முறையாக மோதும் விஜய் - அஜீத் படங்கள்; இந்தமுறை வெற்றி மாலை யாருக்கு?

vijay and ajith pongal release movies- தற்போது 7வது முறையாக, பொங்கல் பண்டிகைக்கு விஜய் - அஜீத் நடித்த படங்கள் ஒன்றாக ரிலீஸ் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

7வது முறையாக மோதும் விஜய் - அஜீத் படங்கள்; இந்தமுறை வெற்றி மாலை யாருக்கு?
X

vijay and ajith pongal release movies- நடிகர்கள் விஜய், அஜீத்

vijay and ajith pongal release movies, ajith and vijay movies have clashed 6 times for pongal,- இதுவரை 6 முறை பொங்கல் பண்டிகை அன்று விஜய் மற்றும் அஜித் இருவரது படங்கள் திரையரங்கில் மோதிக்கொண்டிருக்கின்றன. அதில் யார் அதிக முறை வெற்றி பெற்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் 'மாஸ்' ஹீரோக்களின் படங்கள் ஆண்டுதோறும் தவறாமல் பொங்கல் பண்டிகை நாளில் வெளியாகி திரையரங்கை ரணகளமாக்கும். அதிலும் கோலிவுட்டில் எதிரும் புதிருமாக இருக்கும் அஜித், விஜய் இருவரது நடிப்பில் வந்த படங்கள், இதுவரை 6 முறை பொங்கல் பண்டிகை அன்று திரையரங்கில் மோதிக் மோதிக்கொண்டதால், அதில் அதிக வெற்றி யாருக்கு கிடைத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி வரும் பொங்கலுக்கு 8 ஆண்டுகளுக்கு பின், ஒரே நாளில் தல, தளபதியின் 'வாரிசு', 'துணிவு' படங்கள் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தல, தளபதி ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் இதற்கு முன்பு 1996 ம் ஆண்டு அஜித் நடிப்பில் 'வான்மதி' விஜய் நடிப்பில் 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டும், இவர்களது நடிப்பில் 'காலமெல்லாம் காத்திருப்பேன்', 'நேசம்' திரைப்படங்கள் வெளியானது.

இதில், 'காலமெல்லாம் காத்திருப்பேன்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அஜித்தின் 'நேசம்' தோல்வியை சந்தித்தது. 2001 ம் ஆண்டு சூர்யா, விஜய் நண்பர்களாக இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' படமும் அஜித் நடித்த 'தீனா' படமும் வெளியாகி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

அதன் பின் 2006ம் ஆண்டு வெளியான 'ஆதி' மற்றும் 'பரமசிவன்' என இரண்டு படங்களுமே வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு 'போக்கிரி' மற்றும் 'ஆழ்வார்' படங்கள் வெளியாகி, இதில் 'போக்கிரி' விஜய் படம் மாபெரும் வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2014 ம் ஆண்டு மோகன்லால், விஜய் இணைந்து நடித்து வெளியான 'ஜில்லா' மற்றும் அஜித் நடித்த 'வீரம்' சராசரியான வெற்றியை பெற்றது.

இதன் பிறகு 2023 ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி அஜித்தின் 'துணிவு' படம் வெளியாகிறது அதற்கு அடுத்த நாளான ஜனவரி 12 ம் தேதி விஜயின் 'வாரிசு' ரிலீஸ் ஆகிறது இந்த இரண்டு படங்களுக்கும் இடையே இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் கடும் மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதிலும், 'வாரிசு' படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், 'துணிவு' இளசுகளின் விருப்பமான படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் வாரிசை விட துணிவு அதிக வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரையிலும் விஜய் 5 முறையும், அஜித் 3 முறையும் வாடிவாசலில் மோதும் காளைகளைப் போல பண்டிகை காலங்களில் மோதிக்கொண்ட படங்களின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர்.

Updated On: 6 Jan 2023 6:08 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...