/* */

அடிபட்டாலும் வலிக்கல! அஜித் படத்தில் விலகியதைப் பற்றி அள்ளி விடும் விக்னேஷ் சிவன்

அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதற்கான காரணம் என்ன என்று இயக்குநர் தரப்பில் புது தகவல் வெளியாகி உள்ளது

HIGHLIGHTS

அடிபட்டாலும் வலிக்கல! அஜித் படத்தில் விலகியதைப் பற்றி அள்ளி விடும் விக்னேஷ் சிவன்
X

நடிகர் அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவன் 

தற்போது இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி உள்ள விஷயம் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டது தான். ஒரு டாப் நடிகரின் படத்திலிருந்து இயக்குனர் தூக்கப்பட்டால் அவரது கேரியர் எவ்வளவு மோசமாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அஜித் துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் கதை அஜித் மற்றும் லைக்காவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இப்போது விக்னேஷ் சிவன் இந்த படத்தில் தூக்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.


ஆனால் விக்னேஷ் சிவன் தரப்போ, அஜித் விக்னேஷ் சிவனை வேண்டாம் என்ற சொல்லவில்லையாம். விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கதையும் பிரம்மாண்டமாக இருப்பதாலும், அதேபோல் பட்ஜெட்டும் பெரிய அளவில் உள்ளதாலும், படத்துக்கு கால்ஷீட் அதிகம் தேவைப்படும். அடுத்த படத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்த படம் பண்ணலாம் என விக்னேஷ் சிவனிடம் அஜித் கூறியதாக அவரது மேனேஜர் மூலம் அனைவரிடமும் கூறிவருகிறார்.

இவ்வாறு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரி விக்னேஷ் சிவன் தரப்பு பேசி வருகிறார்கள்.

ஏனென்றால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் படத்தில் இருந்து தூக்கப்பட்டால் அது மிகப் பெரிய சறுக்கலை ஏற்படுத்தும். ஆகையால் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக விக்னேஷ் சிவன் இவ்வாறு கூறிவருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அஜித்தை பொறுத்தவரை தனக்கு ஒரு தோல்வி படம் கொடுத்தாலும் அந்த இயக்குநர் வெற்றி படம் கொடுக்கும் வரை அவருடனே கூட்டணி போடுவார். அதன் பிறகு தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலகுவார். அப்படிதான் சிறுத்தை சிவா, வினோத் போன்றவர்கள் தோல்வி படம் கொடுத்தாலும் கடைசியாக வெற்றி படம் கொடுத்த பின்பே அஜித் கூட்டணியில் இருந்து விலகி உள்ளார்கள்.


விக்னேஷ் சிவன் அஜித்திடம் கதை சொல்லி உள்ளார். அந்தக் கதையை கேட்ட அஜித், இது தனக்கு பிடிக்கவில்லை என்று நேரடியாகவே விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். ஆனால் அதையும் மீறி விக்னேஷ் சிவன் லண்டன் வரை சென்று தயாரிப்பாளரிடம் இதே கதையை கூறியுள்ளார். உடனே லைக்கா தயாரிப்பு நிறுவனம் இந்த கதையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, 8 மாதம் உங்களுக்கு கால் அவகாசம் கொடுத்து கதையை ரெடி பண்ண சொன்னால் இப்படி ஒரு குப்பை கதையை எடுத்து வந்துள்ளீர்களே என்று கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி அந்த சமயத்தில் அஜித்தும் லண்டன் சென்றுள்ளார். அப்போது லைக்கா நிறுவனம் அஜித்தை தனது தயாரிப்பு அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. அதன் பின்னர் விக்னேஷ் சிவனை வரவழைத்து அஜித் மற்றும் லைக்கா இருவரும் சேர்ந்து இந்த படத்திற்கு நீங்கள் வேண்டாம் என முகத்துக்கு நேராகவே கூறிவிட்டனராம்.

இந்த சம்பவத்தின் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வரக்கூடாது என்ற பயத்திலும் இவ்வாறு பொய் சொல்லி வருகிறார் என அவரது சுற்று வட்டாரத்தில் கூறப்படுகிறது. அஜித்தை நம்பி விக்னேஷ் சிவன் மற்ற கதையை தயார் செய்யாமல் இருந்துள்ளார். ஆகையால் இப்போது அடுத்ததாக என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகிறாராம்.


விக்னேஷ் சிவனை லைக்கா தூக்குவது இது முதல்முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா கைவிரித்துள்ளது.

அதேபோன்று இப்போது மறுபடியும் ஏகே 62 படத்திலும் இரண்டாவது முறையாக லைக்கா தன்னுடைய வேலையை காட்டி இருப்பது குறித்து விக்னேஷ் சிவன் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு விக்னேஷ் சிவன் நிச்சயம் அடுத்த ஒரு பெரிய ஹீரோவின் படத்தை இயக்குவது கேள்விக்குறியாக மாறிவிடுமோ என்பது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்துக்கு தெரியாமல் லண்டன் வரை சென்று விக்னேஷ் சிவன் அசிங்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் கிடைத்தும் விக்னேஷ் சிவன் அலட்சியமாக இந்த வாய்ப்பை இழந்து விட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Updated On: 31 Jan 2023 3:24 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்