/* */

தெலுங்கு நடிகர் வருண் தேஜ்- நடிகை லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு..!

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோரின் காதல் விவகாரம் படு ரகசியமாக இருந்துவந்தது. ஆனாலும் வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

HIGHLIGHTS

தெலுங்கு நடிகர் வருண் தேஜ்- நடிகை லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு..!
X

வருண் தேஜ் கொனிடேலா மற்றும் லாவண்யா திரிபாதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காரணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர் இப்போது காதலித்த காதலியை மணம் முடிக்க தயாராகிவிட்டார். இப்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.


அவர்களது நிச்சயதார்த்தம் ஜூன் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அழைப்பைப் பகிர்ந்து கொண்டனர். ஜூன் 9ம் தேதி மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்த ஜோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலையான காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இருவருமே இதை பொதுவெளியில் ஒப்புக்கொள்ளவில்லை.

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபதி இப்போது நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது

ஐந்தாண்டு காதலர்களான தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் நிச்சயதார்த்தம் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக உலா வந்தன. இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நேற்று ஜூன் 9, இந்த ஜோடி இறுதியாக ஹைதராபாத்தில் உள்ள வருண் தேஜின் வீட்டில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டது. அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே இந்த அந்தரங்க விழாவில் கலந்து கொண்டனர்.

அல்லு மற்றும் மெகா குடும்பத்தினர் அடங்கிய வருண் தேஜின் உறவினர்கள் கலந்து கொண்டனர். ராம் சரண், அல்லு அர்ஜுன், சாய் தரம் தேஜ், பஞ்ச வைஷ்ணவ் தேஜ் மற்றும் அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.

வருண் தேஜ், லாவண்யா திரிபாதியை முதன்முறையாக 2017 ஆம் ஆண்டு மிஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தார். படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மலர்ந்து டேட்டிங் செய்ய ஆரம்பித்தது. இருப்பினும், இருவரும் தங்கள் உறவை மூடிமறைத்து வந்தனர்.


இவர்களது இரண்டாவது படமான அந்தரிக்ஷம் 9000 KMPH படத்தின் படப்பிடிப்பின் போது தான் இவர்களது உறவு குறித்த செய்திகள் வெளியாகின. இருவரும் இறுதியில் விருந்துகளில் கலந்து கொள்ளத் தொடங்கினர். பல நிகழ்த்ச்சிகளிலும் ஒன்றாகக் காணப்பட்டனர். வருண் தேஜின் சகோதரியும் நடிகையுமான நிஹாரிகா கொனிடேலா 2020 இல் திருமணம் செய்துகொண்டபோது, அதில் கலந்துகொண்ட சில பிரபலங்களில் லாவண்யாவும் ஒருவர். அவரது அன்றைய இருப்பு அவர்களின் உறவு பற்றிய வதந்தீகளுக்கு மேலும் எண்ணெயை ஊற்றியது போலானது.


கிடைத்துள்ள தகவலின்படி, வருண் தேஜ் அவர்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேஜ் முடிவு செய்தார். அதனால் அவர் லாவண்யாவின் பிறந்தநாளில் டிசம்பர் 15 அன்று திருமணம் செய்ய தனது காதலை முன்மொழிந்தார். பின்னர், இரு நட்சத்திரங்களும் அவரவர் பெற்றோரிடம் பேசி, அவர்களது திருமணத்திற்கு ஒப்புதல் பெற்றனர். அவர்களும் இந்த ஜோடிகளின் உறவைப் பற்றி வாய் திறக்கவில்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

Updated On: 10 Jun 2023 5:35 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?