/* */

ஹீரோயினாகும் வனிதா மகள்! வேற லெவலுக்கு தயாராகும் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் வனிதா மகள்! வேற லெவலுக்கு தயாராகும் திரைப்படம்!

HIGHLIGHTS

ஹீரோயினாகும் வனிதா மகள்! வேற லெவலுக்கு தயாராகும் திரைப்படம்!
X

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகம் ஆக இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும் ஹீரோ யார் என்பதை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

1995ம் ஆண்டு விஜய் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் நடிப்பு சுத்தமாக வராததால் படவாய்ப்பு இல்லாமல் இருந்தவர் பல ஆண்டுகள் கழித்து தனது தந்தை மற்றும் தம்பியுடனான பிரச்னையால் சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்.

இவரது சர்ச்சை நிறைந்த குடும்ப விசயங்களை வெளியில் சொல்லி தனக்கு தானே பல அவமானங்களைத் தேடிக் கொண்டார். பின் அதை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இவரது வில்லத்தனத்தை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். பலரும் வெறுக்க ஆரம்பித்ததால் இவரை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. பின்னர் குக் வித் கோமாளி, சின்னத்திரை, யூடியூம் என அப்படியே பிக்அப் ஆகி இப்போது கொஞ்சம் பிரபலமாக இருந்து வருகிறார்.

இவரது மகளுக்கு 18 வயது நிறைவடைந்துள்ள நிலையில், அவரை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த இருப்பதாக வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார்.

வனிதாவின் மகள் ஜோவிகா விரைவில் திரையில் தோன்ற இருக்கிறார். அவரை வைத்து பெரிய திரைப்படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் வனிதா. கதைகள் கேட்டு வரும் வனிதா நல்ல புதுமுக இயக்குநரை வைத்தே தனது மகளை அறிமுகப்படுத்த இருக்கிறாராம். விரைவில் இயக்குநர் யார், யார் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதை அறிவிப்பாராம்.

ஜோவிகா திரையில் எப்படி இருக்கப்போகிறார், படம் எப்படி வரப்போகிறது என இப்போதே ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Updated On: 23 Aug 2023 6:04 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  7. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  8. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  9. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  10. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது