/* */

லவ் படம் குறித்து வெளிப்படையாக பேசிய வாணி போஜன்

vani bhojan speech at love teaser launch - பரத் மற்றும் வாணி போஜன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள லவ் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

HIGHLIGHTS

லவ் படம் குறித்து வெளிப்படையாக பேசிய வாணி போஜன்
X

வாணி போஜன்

vani bhojan speech at love teaser launch - பரத் மற்றும் வாணி போஜன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள லவ் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடித்த காதல், எம்டன் மகன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார், ஆனால் சில படங்களின் தோல்வியால் பல வருடங்களாக படங்கள் இல்லாமல் தவித்து வருகிறார். இதற்கிடையில் தற்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இவரது மிரள் திரைப்படம் த்ரில்லாக வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது. பரத், வாணிபோஜன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை சக்திவேல் இயக்கியுள்ளார். கதாநாயகியாக நடிக்கும் வாணிபோஜனின் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் நடக்கும் மர்மமான விஷயங்களில் இருந்து இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

மிரள் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த நிலையில் வாணிபோஜனும், பாரத் ஜோடியும் பேசப்பட்டது. இதற்கிடையில் மீண்டும் லவ் என்ற படத்தில் தமாபதிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. காலித் ரஹ்மான் இயக்கத்தில் ரஜிஷா விஜயன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்த 2020 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமாகும்.

காதலித்து திருமணம் செய்த மனைவியை ஏதோ பிரச்சனையில் கொன்று விடுகிறான், அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான், என்ன செய்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாகத் தெரிகிறது. இது மிகவும் த்ரில்லாக உள்ளது. இந்த ஜோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பரபரப்பான படத்தில் நடிக்கிறது. இப்படம் பாரதின் 50வது படமாகும்.

vani bhojan latest news

இந்த படத்தை ஆர்.பி.பாலா ரீமேக் செய்து இயக்குகிறார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, ராதா ரவி மற்றும் டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது லவ் படத்திப் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டீசரை காதல் ஜோடியான ஆர்யா, சயீஷா இனைந்து வெளியிட்டனர். கொலையை செய்துவிட்டு அதை மறைக்க பரத் செய்யும் விசயங்கள் விறுவிறுப்புடன் டீசரில் காட்டி உள்ளனர். வித்தியாசமாக உள்ளதனால் இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய வாணி போஜன், படத்தின் சண்டை கட்சியின் போது நடிகர் பரத்தை கடுமையாக அடித்துள்ளேன், அவரும் என்னை திருப்பி அடித்துள்ளார். இந்த படத்திற்காக இருவரும் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம் எனப் பேசினார்.

விழாவில் வெளிப்படையாக வாணி போஜனின் பேச்சு இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Updated On: 8 Dec 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...