/* */

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக தயாராக போகும் திரைப்படம் வாடிவாசல்

சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததா தயாராக போற படம் வாடிவாசல்.

HIGHLIGHTS

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக தயாராக போகும் திரைப்படம் வாடிவாசல்
X

சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததா தயாராக போற படம் வாடிவாசல். இப்படத்தை வெற்றிமாறன் டைரக்ட் செய்ய போறார். இப்படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து உருவாகுது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருது.

இந்த வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் அண்மையில் சென்னையில் நடைபெற்றுச்சு. இதற்காக பிரம்மாண்ட செட் போட்டு, ஜல்லிக்கட்டு காட்சிகள் சில படமாக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட சூர்யா, காளையை அடக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

இந்நிலையில், வாடிவாசல் படத்தின் மாஸ் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி வாடிவாசல் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி கடும் போட்டி நிலவி வருவதாகவும், இதுவரை இல்லாத அளவு அதிக தொகைக்கு இப்படத்தின் ஆடியோ உரிமைகளை வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக ஜிவி பிரகாஷ் தெரிவிச்சிருந்தார்.

இந்த வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, இப்படத்தில் நடித்து முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் இப்படத்தின் ஓடிடி ரைட்-ஸை வாங்கவும் பலத்த போட்டி இப்போதே ஆரம்பிச்சுடதா தகவல்..

இது குறிச்சு ஒரு புரொடியூசர், 'அந்தக் காலத்தில் ஒரு பட பூஜையின் போதே தியேட்டர் அதிபருங்க பலபேர் ஏகப்பட்ட்ட பணம் கொண்டாந்து கொடுத்து பிரிண்ட் ஆர்டர் சொல்லிடுவாய்ங்க.. பழங்கனவாகி போன அச்சூழல் இப்போ ஓடிடி டீம் வடிவில் மறுபடியும் தொடங்குது.. டாப் ஆர்டிஸ்ட்ஸ் & டெக்னிஷியன்களோட தொடங்கும் படத்தை வாங்க பல கோடி ரூபாய்களுடன் வரும் ஓடிடி குரூப் எண்ணிக்கை எகிறிக்கிட்டே போகுது' அப்படீன்னார்

Updated On: 31 March 2022 5:44 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்