/* */

தமிழில் முதல் ஐந்து இடங்களை பிடித்த டிவி சீரியல்கள்

top 5 tamil serials trp ratings- தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் ஐந்து சீரியல்கள், ‘ரேட்டிங்’ அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழில் முதல் ஐந்து இடங்களை பிடித்த டிவி சீரியல்கள்
X

top 5 tamil serials trp ratings- டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த ‘கயல்’

top 5 tamil serials trp ratings, tamil serials top 5 trp ratings list- சினிமாவுக்கு அடுத்தபடியாக, மக்கள் அதிகம் ரசித்து பார்ப்பது டிவி சீரியல்கள்தான். அதிலும் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில், அபரிமிதமான வரவேற்பு நீடித்து வருகிறது. கடந்த காலங்களில் குறிப்பாக சில சீரியல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.


சித்தி, மெட்டி ஒலி, கங்கா யமுனா சரஸ்வதி, நாதஸ்வரம், கோலங்கள், தெய்வமகள், தேவதாசி, திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களை சொல்லலாம். இப்போதும் கூட இவற்றில் சில சீரியல்கள் நாதஸ்வரம், தெய்வமகள், திருமதி செல்வம் போன்ற சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு, ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.


இதிலும், சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு அடிப்படையில், டிஆர்பி ரேட்டிங் மதிப்பிடப்படுகிறது. இதில், முதல் இடத்தை பிடிப்பதில் டிவி சேனல்களிடையே மறைமுகமாக பலத்த போட்டி நிலவுகிறது. இதில், பெரும்பாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களே, டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடங்களை கைப்பற்றுவது, எப்போதுமே தொடர்வது வழக்கமாக உள்ளது. ஏனெனில், முக்கிய நடிகர்கள், பிரபல சீரியல் இயக்குநர்களின் தொடர்களே சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்பதும் அதற்கு அடிப்படை காரணமாக உள்ளது.


அந்த வகையில், தற்போதைய சூழலிலும் சன் டிவி தொடர்களே, முக்கிய இடங்களை பிடித்து முன்னணியில் இருந்து வருகிறது. இந்த போட்டியில், டிவி சேனல்களுக்கு இடையே டிஆர்பி ரேட்டிங் போட்டி எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சீரியல்களின் கதைகளில் அவ்வப்போது எதாவது 'ட்விஸ்டு'கள் இருக்கும் வகையில் வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.


தினமும் 30 நிமிடங்களே ஒளிபரப்பாகும் சீரியல் என்றாலும், தொடரின் இறுதியில் ஏதேனும் ஒரு சஸ்பென்ஸ் உடன், அந்த நாள் காட்சியை முடிப்பது, அடுத்தடுத்த நாட்களில் தொடரை தொடர்ந்து பார்க்க ரசிகர்களை துாண்டி விடுகிறது. ஒரு கட்டத்தில், அந்த தொடரின் நிரந்தர பார்வையாளர்களாக மக்கள் மாறி விடுகின்றனர். இதனால், டிஆர்பி ரேட்டிங் எகிறி விடுகிறது. அந்த வகையில் சித்தி, மெட்டி ஒலி, திருமதி செல்வம் தொடர்களை குறிப்பிட்டு சொல்லலாம்.


இப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் மற்ற சேனல்களை விட அதிகம் ரேட்டிங் பெற்று வருகிறது. டாப் 5 லிஸ்டில் சன் டிவி தொடர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, ஒரே ஒரு விஜய்க்கு டிவி சீரியல் தான் டாப் 5 பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.

டாப் 5 சீரியல்கள்

கயல் - 10.86

எதிர்நீச்சல் - 10.85

சுந்தரி - 10.54

ரோஜா - 9.51

பாக்கியலட்சுமி - 9

இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த நான்கு தொடர்களுமே சன் டிவியில் ஒளிபரப்பாகிறது; பாக்கியலட்சுமி தொடர் மட்டுமே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Nov 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...