/* */

இந்த ஆண்டில் 'டாப் 10' படங்கள் என்ன தெரியுமா?

top 10 hit movies in tamil 2022- நடப்பு ஆண்டில் வெளியான தமிழ் சினிமா படங்களில், அதிக வசூலில் முதலிடம் பெற்று 'பொன்னியின் செல்வன்' வெற்றி வாகை சூடியது.

HIGHLIGHTS

இந்த ஆண்டில் டாப் 10 படங்கள் என்ன தெரியுமா?
X

top 10 hit movies in tamil 2022- இந்த ஆண்டில், வசூலில் முதலிடம் பிடித்த ‘பொன்னியின் செல்வன்’

top 10 box office collection movies in tamil 2022, top 10 hit movies in tamil 2022- தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மட்டும் 60க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.இதில் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிக பெரிய வெற்றி கொடுத்தது, ஆனால் சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

அந்தவகையில் இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் அதன் வசூல் விபரங்களை பார்ப்போம்.


முதல் இடத்தில் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் "பொன்னியின் செல்வன்".எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக்கொண்டு இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகம் முழுவதும், 500 கோடி ரூபாய் வசூல் செய்தது.இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது.


இரண்டாம் இடத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் "விக்ரம்".இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்தது.நடிகர் கமலுக்கு சிறந்த கம் பேக் படமாக இப்படம் அமைந்தது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகம் முழுவதும், 420 கோடி ரூபாய் வசூல் செய்தது.


மூன்றாம் இடத்தில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் "பீஸ்ட்".இப்படம் விமர்சன ரீதியாக மிக பெரிய தோல்வியை கண்டது.ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்தாலும் வசூலில் தட்டி தூக்கியது.இப்படம் உலகம் முழுவதும் 236.90 கோடி ரூபாய் வசூல் செய்தது.

நான்காம் இடத்தில் இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் வெளியான ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் "வலிமை".நடிகர் அஜித் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.இப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஐந்தாம் இடத்தில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் "எதற்கும் துணிந்தவன்".இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.இப்படம் உலகம் முழுவதும், 179 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஆறாம் இடத்தில் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் "திருச்சிற்றம்பலம்".இப்படம் காதல் மற்றும் காமெடி படமாக எடுக்கப்பட்டது.இப்படம் உலகம் முழுவதும் 110 கோடி ரூபாய் வசூல் செய்தது.


ஏழாம் இடத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் "சர்தார்".சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கார்த்தி டூயல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.


எட்டாம் இடத்தில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த படம் "லவ் டுடே". இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இரு காதலர்களுக்கு இடையே நடைபெறும் காதல் சண்டையை மையமாக வைத்து காமெடி கலந்த படமாக பிரதீப் இயக்கியுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றி பெற்ற இப்படம் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஒன்பதாம் இடத்தில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படம் "வெந்து தணிந்தது காடு".இப்படம் காதல் மற்றும் ஆக்சன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டது.சிம்பு ரசிகர்களை கவர்ந்த இப்படம் உலகம் முழுவதும் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது.

கடைசி இடத்தில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கிராமத்து படம் "விருமன்".இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மக்கள் அதிதி ஷங்கர் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இப்படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது.

Updated On: 29 Dec 2022 11:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்