/* */

ரசிகர்கள் நினைவுகளில் இன்றும் வாழும் 'சில்க் ஸ்மிதா' வின் நினைவு தினம் இன்று !

Actor Silk Smitha -தமிழ் சினிமா வரலாற்றில், என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் சில்க் ஸ்மிதா. நடிப்பில், கவர்ச்சியில் ரசிகர்களை தன்பக்கம் இழுத்த சில்க் ஸ்மிதா, இன்றைய கிளாமர் தமிழ் சினிமாவின் முன்னோடியாக கருதப்படுகிறார். கிறக்கமான அவரது பார்வையில், இன்றும் கிறங்கும் ரசிகர்கள் அவருக்கு ஏராளம். 1996ல் இதே நாளில் மறைந்தார். அவரது நினைவு தினம் இன்று. ஆனால், இறந்து 26 ஆண்டுகளாகியும், இன்னும் சில்க் ஸ்மிதா, ரசிகர்களின் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

HIGHLIGHTS

Actor Silk Smitha | Ninaivu Naal
X

இன்று நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம்.

Actor Silk Smitha -சில்க் ஸ்மிதா, 1960டிசம்பர் 2ல் பிறந்தவர். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா. தமிழ்பட நடிகர் வினுசக்கரவர்த்தி 'வண்டிச்சக்கரம்' என்ற திரைப்படத்தில் 'சிலுக்கு' என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு என்ற சொற்றொடர் கனகச்சிதமாக பொருந்துவது 'சில்க் ஸ்மிதா' என்ற நடிகைக்குத்தான். தமிழ் திரை உலகில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும் மறைந்து இரண்டரை தசாப்தங்களுக்குப் பிறகும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ஆச்சரியங்களும் சுவாரஸ்யங்களும் நிரம்பியது.


ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமியாகப் பிறந்த சில்க் ஸ்மிதா, நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவர். சிறுவயதிலேயே திருமணமாகி மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில்க் ஸ்மிதா, நடிகை ஆகவேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்தார்.

வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்த இயக்குநர் வினுசக்கரவர்த்தி 'வண்டிச்சக்கரம்' என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார். தன்னுடைய திரை பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்ட விஜயலட்சுமி, முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார். முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதா விற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின.

கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. அன்றைய தேதியில் தமிழில் உருவான எல்லா திரைப்படங்களிலும் சில்க் ஸ்மிதா கட்டாயம் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினர். இதன் காரணமாக குறுகிய காலகட்டத்தில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா. பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களே வழங்கப்பட்டாலும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது சில்க்ஸ்மிதாவின் கனவு.

மிகக் குறுகிய வாய்ப்புகளே நடிக்க கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் நடிப்பில் துவம்சம் செய்தார் சில்க் ஸ்மிதா. பாரதிராஜா இயக்கத்தில் 'அலைகள் ஓய்வதில்லை', 'நேற்று பெய்த மழையில்', 'மூன்றாம் பிறை' என சில்க் ஸ்மிதா கவர்ச்சி கடந்து நடிப்பிலும் முத்திரை பதித்தார். தமிழைக் காட்டிலும் மலையாள திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டிய சில்க் ஸ்மிதா, மலையாள திரையுலகில் நடிக்க வாய்ப்புடைய கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதாக எண்ணினார்.

கவர்ச்சி நடிகையாக இருந்ததால் பலரின் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளான சில்க் ஸ்மிதா, ஆண்களால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார்.

மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியே இருந்த சில்க்ஸ்மிதாவின் வாழ்வில் பல மர்மங்களும் சர்ச்சைகளும் ஒளிந்துள்ளன. அன்றைய தேதியில் முதல்வராக இருந்த எம்ஜிஆர் பங்கேற்ற விழாவில் பங்கேற்க மறுத்தது, நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது எழுந்து நிற்க மறுத்தது உள்ளிட்டவை சில்க் ஸ்மிதாவை திமிர் பிடித்த பெண்ணாக இன்றும் வரலாற்றில் சித்தரித்துக் கொண்டிருக்க, தான் சம்பாதித்த பணத்தை பண்ணையார்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மக்களுக்கு நிதியாக வாரி வழங்கிய சில்க் ஸ்மிதாவின் மற்றொரு முகம் பலரும் அறியாத ஒன்று.


சிறுவயதில் பல நெருக்கடிகளுக்கும் ஆளான காரணத்தால் தன்னையொரு நக்சலாக நினைப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் சில்க் ஸ்மிதா. மர்மங்களால் நிறைந்த சில்க்ஸ்மிதாவின் இறுதி வாழ்க்கையில் தாடிக்கார டாக்டர் என்ற பெயர் இன்றளவும் யாரென கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே இருந்து வருகிறது.

புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா மரணமடைந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாரும் பெற்றுக்கொள்ள ஆளில்லாத அனாதைப் பிணமாக வைக்கப்பட்டிருந்தார். தகவல் கிடைத்த பின்னரே அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் சுமிதாவின் உடலைப் பெற்றுக்கொண்டனர். எனினும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சில்க் ஸ்மிதா கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

1996இல், ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிப்பழக்கத்தினாலும், மன இறுக்கத்திற்கு ஆளானதாக நம்பப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்தினைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

புகழின் உச்சியில் இருந்தபோதும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்களை ஒளித்து வைத்திருந்த சில்க் ஸ்மிதாவின் மரணத்தின்போதும் மர்மங்களோடே மண்ணுலகை விட்டு மறைந்தார்.

மறைந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் பல திரை ரசிகர்களுக்கு நினைவில் நீங்காத பெயராக நிலைத்திருக்கும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் இணைய தொடர்களாக இன்னமும் வெளிவந்து கல்லாக் கட்டிக் கொண்டிருக்கின்றன. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் போன் என்ற பழமொழி சில்க் ஸ்மிதாவிற்கு கன கச்சிதமாகப் பொருந்தும் ஒன்று.

மண்ணை விட்டு மறைந்தாலும், ரசிகர்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சில்க் ஸ்மிதா.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Sep 2022 10:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!