/* */

'மங்காத்தா' சாயலில் 'துணிவு' - இந்த முறை ரசிகர்களுக்கு 'தல' பொங்கல்தான்!

thunivu movie story- அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தின் கதை சாயலில்தான், ‘துணிவு’ படம் இருக்கும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

மங்காத்தா சாயலில் துணிவு - இந்த முறை ரசிகர்களுக்கு தல பொங்கல்தான்!
X

thunivu movie story- நடிகர் அஜித்.

thunivu movie story, thunivu movie latest news-வரும் பொங்கலுக்கு, அஜித் நடித்த 'துணிவு' படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. 'வலிமை' படத்தை தொடர்ந்து, ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் படம் இது. அஜித் படங்களை பொருத்தவரை ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்படும். 'வலிமை' படத்தில் 'அம்மா' சென்டிமென்ட், 'விஸ்வாசம்' படத்தில், மகள் சென்டிமென்ட் இருந்தது. அத்துடன் காதல், காமெடி, ஆக்சன் என, சகல விதங்களையும் உள்ளடக்கியதாக அவரது படங்கள் ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்படுகிறது.


அஜித் படங்களை பொருத்தவரை அடிக்கடி அவரது படங்கள் வெளிவருவதில்லை. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே அவர் தேர்வு செய்து நடிக்கிறார். வீரம், விவேகம், வேதாளம், வலிமை, விஸ்வாசம் என, அவரது சமீப கால படங்கள் அனைத்துமே, நல்ல வெற்றி படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வெண்மை நிற தாடி, மீசை, தலைமுடியுடன் எந்தவிதமான மேக்கப் இல்லாமல், அவரது இயல்பான தோற்றமே, ரசிகர்களுக்கு 'மாஸ் எண்ட்ரி' ஆக மாறிவிட்டது. அதுவும், 'துணிவு' படத்தின் போஸ்டர்களும், பாடல்களும் ரசிகர்களை இப்போதே குதூகலிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், வெளிவர உள்ள அஜித் நடித்த 'துணிவு' படத்தின் கதை, 'மங்காத்தா' கதையை போன்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த படம் 'மங்காத்தா'. பிரபு வெங்கட் இயக்கிய படம். இதில், அர்ஜூன் வில்லனாக நடித்திருந்தார். அஜித் ஜோடியாக, த்ரிஷா நடித்திருந்தார்.


இது அஜித்தின் 50வது படம் என்பதால், ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள். அதே போல, அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் 'துணிவு' படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'மங்காத்தா' படத்தில் நான்கு நபர்கள் இணைந்து ரூ. 500 கோடியை திருட திட்டமிடுவார்கள். இதில் இறுதியாக அஜித் இணைந்துகொள்வார். அதே போல் 'துணிவு' படத்தில் நான்கு குருப் தனித்தனியாக செயல்பட்டு, ரூ. 5000 கோடியை திருட திட்டமிடுகிறார்களாம். இந்த நான்கு குரூப்பிலும் அஜித் இருப்பார் என்றும், கடைசியில் அஜித் கொடுக்கும் ட்விஸ்ட் தான் படத்தின் வெற லெவல் மாஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இன்றைய காலகட்டத்தில், 'குரூப்பிசம்' சார்ந்த கதைகளை மக்கள் விரும்பி ரசிக்கின்றனர். அதுவும் கேங்ஸ்டார் குரூப்களாக சண்டையிட்டு கொள்ளும் படங்கள், மக்களை அதிகளவில் ரசிக்க வைக்கிறது. கேஜிஎப், விக்ரம் போன்ற படங்களை மக்கள் கொண்டாடி வெற்றி பெற வைக்கின்றனர். அந்த வகையில், 'துணிவு' படமும் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை, வெற்றியை பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Updated On: 30 Dec 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!