/* */

வாரிசை முந்திய துணிவு முன்பதிவு: யார் நம்பர் 1?

Thunivu Ticket Booking-விஜயின் வாரிசு படத்தை விட அஜித்தின் துணிவு அதிக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

Thunivu Ticket Booking
X

Thunivu Ticket Booking

Thunivu Ticket Booking-அஜித்-விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்கள். இவர்களது படம் வெளிவந்தாலே அது ஹிட் லிஸ்ட் தான், நஷ்டம் என இல்லாமல் இவர்களின் படங்கள் இப்போதெல்லாம் ஓடுகின்றன.

நடிகர் விஜய் நடித்த 'வாரிசு', நடிகர் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 11-ம் தேதி வெளியாக உள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படங்களை ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதல் நாளிலேயே பார்க்க தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில் இப்போது பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 11ம் தேதி அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு அதிகாலை 4 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில், அதற்க்கு எந்த வகையிலும் குறைவு இல்லாத அளவிற்கு ப்ரீ புக்கிங் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் துவங்கிய இந்த இரு திரைப்படங்களின் ப்ரீ புக்கிங் எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. 'வாரிசு', 'துணிவு' திரைப்படங்களில் இணையதள டிக்கெட் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இணையதள டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கினர். மேலும் இந்தப் படங்களின் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன.

ப்ரீ புக்கிங்

இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே வாரிசு திரைப்படம் ரூ. 9 கோடி வரை ப்ரீ புக்கிங் ஆகியுள்ளது என தெரியவந்துள்ளது.

நேற்றில் இருந்து துணிவு படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. உலகளவில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த ப்ரீ புக்கிங்கில் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு படத்தை ஓரங்கட்டி ரூ. 10 கோடி வரை ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

இதை வைத்து ரசிகர்கள் பலரும், படம் வெளிவந்தால் தமிழத்தில் யார் நம்பர் 1 என்று தெரிந்துவிடும் என சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்று.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 9:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?