/* */

பிக்பாஸ் 6-வது சீசனில் இந்த வாரம் கதை சொல்லும் நேரம் வீக்லி டாஸ்க்

bigg boss season-6 news, weekly task mewsபிக்பாஸ் 6-வது சீசனில் இந்த வாரம் கதை சொல்லும் நேரம் வீக்லி டாஸ்க் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பிக்பாஸ் 6-வது சீசனில் இந்த வாரம் கதை சொல்லும் நேரம் வீக்லி டாஸ்க்
X

bigg boss season-6 news, weekly task mewsஉலக நாயகன் கமல்ஹாசன் தமிழில் பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார். ஏற்கனவே ஐந்து சீசன் பிக்பாஸ் பொழுது போக்கு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்ற 20 நடிகர் நடிகைகளையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

bigg boss season-6 news, weekly task mewsபிரபல யூடியுபர் ஜி.பி. முத்துவின் கலாட்டாவுடன் முதல் நாள் துவக்க நிகழ்ச்சி அமைந்தது.கலகலப்பாக தினமும் இரவு 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சி ஆங்கர் சின்னத்திரை நடிகை மைனா நந்தினி இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி ஆனார். இறுதியாக தான் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் என உள்ளே வந்துள்ளார்.

bigg boss season-6 news, weekly task mewsஎனவே போட்டிக்கும் கலாய்ப்புக்கும் இனி பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியில் கமல்ஹாசன் இந்த வாரத்திற்கான டாஸ்க்கை அறிவித்தார். அது இந்த வாரம் கதை சொல்லும் நேரம், இது தான் இந்த வாரத்திற்கான வீக்லி டாஸ்க் எனவும் குறிப்பிட்டு இருந்தார். கதையை முழுதாக முடிப்பவர்கள் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து விடுபடுவார்கள் என்றும் கூறினார். முதலில் கதை சொல்ல வந்தார் அசிம். அவர் தனக்கும் தனது மனைவிக்கும் ஏற்பட்ட காதல், திருமணம், கருத்து வேறுபாடு மற்றும் குழந்தை பிறப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த போது இந்த வாரத்திற்கான அசிம் உங்களது வாய்ப்பு முடிந்து விட்டது என்று கமல் அறிவித்து விட்டார்.

bigg boss season-6 news, weekly task mewsஇதே போல் போட்டியில் பங்கேற்று உள்ள இலங்கை ஜனனி உள்பட மற்ற நடிகர் நடிகைகளும் தங்களது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை கதையாக கூறினார்கள்.

Updated On: 19 Oct 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...