/* */

'திருச்சிற்றம்பலம்' - ஐம்பது நாள் கொண்டாட்டம்..!

Thiruchitrambalam Movie -நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த 'திருச்சிற்றம்பலம்' படம் ஐம்பது நாட்களைக் கடந்த வெற்றியில் ரசிகர்கள் உற்சாகம்.

HIGHLIGHTS

திருச்சிற்றம்பலம் - ஐம்பது நாள் கொண்டாட்டம்..!
X

Thiruchitrambalam Movie -தமிழ்த் திரையுலகில் சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி, நூறு நாட்கள், நூற்றைம்பது நாட்கள் என்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வெற்றிக் கொண்டாட்டத்தில் இடம் பெறும். அதோடு, படத்துக்கான வெற்றி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு ஆட்பட்டு இப்போதெல்லாம் ஒரு படம் திரையரங்கில் வெளியாகும்போது எத்தனை திரைகளில் வெளியீடு என்ற கணக்கில் வெற்றிகரமான இரண்டாவது நாள் மூன்றாவது நாள் என்று முதல் பத்து நாட்களையே பிரமாண்ட நாட்களாகக் கொண்டாடக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அண்மைக்காலமாக ஒரு சில படங்கள் பழைய காலங்களைப் போலவே டிஜிட்டல் போட்டியையும் எதிர்கொண்டு ஐம்பது நாட்கள் நூறு நாட்கள் என்று ஓடி சாதனை புரியத் தொடங்கியிருக்கின்றன. இந்தநிலையில், நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்தது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பும் முக்கியப் பங்கு வகித்தது.

பெரும்பாலும் தற்போது, நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களைக் கொண்டாட வைத்துக்கொண்டிருக்கிறது. அத்துடன், ஓடிடியில் அவரது 'ஜகமே தந்திரம்', 'அட்ராங்கி ரே', 'மாறன்' மற்றும் 'தி க்ரே மேன்' ஆகிய படங்கள் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என வெளியான நிலையில், தனுஷின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இந்தநிலையில், ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான, 'திருச்சிற்றம்பலம்' படம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இந்தப் படத்தின் இயல்பான மற்றும் எளிமையான கதையால் ஈர்க்கப்பட்ட நிலையில், படம் நல்லதொரு வெற்றியைப் பெற்றுத்தந்தது.

மேலும், படம் வெளியான 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இத்தகைய வெற்றியை தனுஷின் படம் பெற்றுள்ளது. இந்த வெற்றி, அவரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை எளிமையான கதைக்களத்தில் இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.

நடிகர் தனுஷுடன், அவரது முந்தைய படங்களான 'யாரடி நீ மோகினி', 'குட்டி' போன்ற படங்களும் நன்றாக ஓடிய நிலையில், தற்போது 'திருச்சிற்றம்பலம்' படமும் வெற்றிப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. அதற்கான முத்தாய்ப்பாகத்தான், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையொட்டி, படக்குழுவினர் ஐம்பது நாள் போஸ்டர் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், நடிகர் தனுஷின் 'நானே வருவேன்' படம் கடந்த வாரத்தில் வெளியாகி, இருவேறு கருத்துகளிலும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' வெளியாகி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனுஷின் 'நானே வருவேன்' படம் பேசத்தக்க வசூலுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Oct 2022 8:48 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்