/* */

எம்.ஜி.ஆர் கொடுக்க நினைத்த பொறுப்பு! சிவாஜி மனம் திறந்த பேட்டி

எம்.ஜி.ஆர்., என்னிடம் கொடுக்க நினைத்த பொறுப்பு பற்றி எனக்கு தெரியும் என, நடிகர் சிவாஜிகணேசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

HIGHLIGHTS

எம்.ஜி.ஆர் கொடுக்க நினைத்த பொறுப்பு!  சிவாஜி மனம் திறந்த பேட்டி
X

எம்ஜிஆர் - சிவாஜி (கோப்பு படங்கள்)

‘அரிதாரம் கலைத்த குரல்கள்’ என்ற தலைப்பில் சுகதேவ், சிவாஜி கணேசனிடம் 1997ம் ஆண்டு எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதியை காணலாம். (குறிப்பு; இந்த பேட்டி முதலில் வெளிவந்தது 1997 தினமணி- தீபாவளி மலரில்).

கேள்வி : உங்கள் காலத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். குடிகாரனாகவோ, வில்லனாகவோ அவர் நடித்ததில்லை. இமேஜ் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். ஆனால், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தீர்களே.. ஏன்?

சிவாஜி : தன்னைப் பற்றி உணர்ந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரது திறமை பற்றி அவருக்கே தெரியும். யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவர் அப்போதே அரசியலில் பெரிய அளவுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டார். அதனால் மக்களிடம் நன்மதிப்பு காணும் பாத்திரங்களிலேயே நடித்தார். ஆனால், நான் எனது கேரக்டர் தான் முக்கியம் என்று நினைத்தேன். எந்தப் பாத்திரமானாலும் சரி, அதை எப்படிச் செய்வது என்பதில் தான் எனது கவனம் இருந்தது.

பின்னாளில் நானும் அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனாலும் காமராஜருடைய தொண்டனாக மட்டும் தானே இருந்தேன். அவருக்குப் பக்கத்திலேயே தலைவனாக வரவேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லையே!

கேள்வி : நீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் ‘நல்ல’ பாத்திரங்களிலேயே நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?

சிவாஜி : இல்லை.. நடிப்புக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால், சம்பந்தம் உண்டு என்று மக்கள் நிரூபித்து விட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றி பெற்றார். He did it. I missed the bus. எனக்கு அரசியல் இரண்டாம் பட்சம் தான். நான் குடிகாரனாக, பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால்தான், 300 படங்களில் நடிக்க முடிந்தது.

அரசியலில் இன்று வந்து விட்டு, நாளை போய் விடுவார்கள். எத்தனை பேருக்குப் பேர் இருக்கு? ‘செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு’ என்று கூட, எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதற்காக, ‘சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று சொல்வதாகக் கூட வைத்துக் கொள்ளுங்களேன்( சிரிக்கிறார்).

இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்து கொண்டேன். அவர்கள் என்னை நடிகனாக மட்டும் தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சில பேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லை என்றால், அரசியல்வாதியாக மாறி விடுகிறார்கள் ( உரக்கச் சிரிக்கிறார்).

கேள்வி : இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல இருக்கிறதே?

சிவாஜி : கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க.. நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள்.. அதுவும் இப்படித் தான் நடக்கிறது.. நடக்கப் போகிறது!

கேள்வி : எம்.ஜி.ஆருக்கும், உங்களுக்கும் உள்ள உறவு எப்படி இருந்தது?

சிவாஜி : நாங்கள் எதிரும், புதிருமாக இருந்ததாகத் தான் வெளியிலே தெரியும். தனிப்பட்ட முறையில் நாங்கள் ஒற்றுமையாகத் தான் இருந்தோம். எவ்வளவு நாட்கள்.. எத்தனை பேர்களை.. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏமாற்றியிருப்போம்… (சிரித்துக் கொண்டே சொல்கிறார்). தனிப்பட்ட முறையில், எங்களுக்கிடையில் நல்லுறவு இல்லை என்றால், எதற்காகக் கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்?

எதற்காக நான் சார்டர்ட் பிளைட் வைத்துக் கொண்டு, பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன். எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு “வீட்டுக்கு வாடா.. முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்’’ என்று சொல்கிறார்? எதற்காக மனைவியிடம் “தம்பி வருகிறான்.. அவனுக்குப் பிடித்த ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் செய்து வை’’ என்று சொல்கிறார்?

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.. தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தான் இருந்தோம்.. நாங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்ததால் தான் இருவருமே பெரிய நிலைக்கு வர முடிந்தது. ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.

கேள்வி : எம்.ஜி.ஆர் எந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுக்க எண்ணியிருப்பார் என்று கருதுகிறீர்கள்?

சிவாஜி : எந்தப் பொறுப்பை என்னிடம் கொடுக்க நினைத்திருப்பார் என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போது அதைச் சொல்வதில் என்ன பிரயோசனம்?என்னுடைய நினைவுகள் என்னுடனே போகட்டும்’’

என்று கூறி இருக்கிறார் சிவாஜி.

Updated On: 26 May 2023 5:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?