/* */

'முதலில் குடும்பத்தை பாருங்க'- ரசிகர்களுக்கு விஜய் 'அட்வைஸ்'

Thalapathy Vijay's Advice For His Fans- முதலில் குடும்பத்தையும், அடுத்து தொழிலையும் பாருங்கள் என, ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

HIGHLIGHTS

முதலில் குடும்பத்தை பாருங்க- ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
X

 Thalapathy Vijay's Advice For His Fans-  ரசிகர்களை கடன் வாங்க கூடாது என, அறிவுறுத்திய நடிகர் விஜய்.

Thalapathy Vijay's Advice For His Fans-நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் மட்டும் அல்ல, அருகில் இருக்கும் மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக, பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள். மேலும் விஜய் பேரிடர் காலங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வது என்றாலும், தனது மக்கள் இயக்கம் மூலமாகத்தான் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தனது ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டணி நடந்தபோது, விஜய் சொன்ன அறிவுரை என்ன என்பதை செயலாளர் எல்லோருக்கும் கூறி இருக்கிறார்.


ஹைதராபாத்தில் இருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், பனையூரில் உள்ள தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் அதில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக கருத்துக்களை தெரிவிக்காவிட்டாலும், அது தொடர்பாக நீண்ட ஆலோசனையில் இருக்கிறார். இதன் விளைவாகவே கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர்.

முதலில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 51 பேர் வெற்றி பெற்றதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறினர். ஆனால் விஜய்க்கு தெரியாமல் அவர்கள் போட்டியிட்டதாக தகவல்கள் பரவியது.


அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், நடிகர் விஜய்யின் ஒப்புதலுடன் தான் தேர்தலில் அவர்கள் போட்டியிட்டதை உறுதி செய்யும் வகையில் பனையூரில் தனது வீட்டில் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்ததோடு அவர்களுக்கு விருந்தும் வைத்தார். இதை அடுத்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களமிறங்கினர்.

பெரிய அளவிலான வெற்றி இல்லை என்றாலும், விஜய்யின் புகைப்படம் மற்றும் கொடியை எடுத்துச் சென்றதற்கே அவர்களுக்கு ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்தது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் விஜய், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா என நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், தனது இயக்கத்தின் செயல்பாடுகள் அரசியல் அடித்தளத்தை உறுதி செய்து கொள்ளும் வகையில் விஜய் மக்கள் இயக்க ஐடி விங்கை பலப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.

இதனிடையே, ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், பனையூரில் உள்ள தனது வீட்டில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


சென்னை, பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் இயக்கத்தை பலப்படுத்துவது குறித்தும், அரசியல் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து நடிகர் விஜய் உடன் ஆலோசனைக்கு பிறகு இயக்க நிர்வாகிகளுடன் பேசிய புஸ்ஸி ஆனந்த்," ரசிகர்கள் முதலில் குடும்பத்தைத்தான் பார்க்க வேண்டும். அதன்பிறகு, தொழிலை பார்க்க வேண்டும். அதன்பிறகு தான் அரசியல் சேவை உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வர வேண்டும் எனவும், வருமானத்தின் ஒரு பகுதியை மட்டும் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு செலவிட வேண்டும். இதற்காக, ரசிகர்கள் யாரிடமும் கடன் வாங்க கூடாது என்று விஜய் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Nov 2022 10:07 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்