/* */

சம்பளத்தை குறைத்துக்கொண்ட விஜய்

Vijay Salary For Thalapathy 67- வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் விஜய், தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

சம்பளத்தை குறைத்துக்கொண்ட விஜய்
X

Vijay reduced his salary -  நடிகர் விஜய்

Vijay Salary For Thalapathy 67- தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு', பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

மேலும் தற்போது ரசிகர்கள் இப்படத்தின் அடுத்த 'அப்டேட்'டை தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். அதன்படி அடுத்த வாரம் இப்படத்தின் முதல் 'சிங்கிள் அப்டேட்' வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்திற்கு பின் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அப்படம் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. மேலும், தற்போது அப்படத்திற்காக விஜய் தனது சம்பளத்தை குறைத்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி ரூ. 130 கோடியில் இருந்து, 5 கோடியை குறைத்து கொண்டு 125 கோடியை அவர் சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

விஜய், 'வாரிசு' படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 படத்தில் இணைய உள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் மூணார் மலைப்பகுதியில் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் 5ம் தேதி, தளபதி 67 படத்திற்கான சூட்டிங் மூணாறில் தொடங்க உள்ளது. இப்போது இப்படத்தில் நடிப்பதற்கான மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறதாம். இந்நிலையில், தளபதி 67 படத்தில் லோகேஷ் மற்றும் விஜய்யின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது. கடைசியாக விஜய் 'வாரிசு' படத்திற்கு ரூ.130 கோடி சம்பளம் பெற்றிருந்தார்.


இதனால் கண்டிப்பாக தளபதி 67 படத்தில், விஜய்யின் சம்பளம்ரூ. 150 கோடியை எட்டிருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்காக ரூ. 125 கோடி மட்டுமே விஜய் சம்பளமாக வாங்குகிறாராம். அதேபோல் லோகேஷ் ஒரு படத்திற்குரூ. 25 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில், இந்த படத்திற்கு ரூ.20 கோடி மட்டும் தான் சம்பளம் பெறுகிறார்.


இதற்கு காரணம், தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தான். ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் முன்பே வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி, 'பிளாக்பஸ்டர்' ஹிட் அடித்தது. ஆனால் கோவிட் தொற்று காரணமாக படப்பிடிப்பு, நீண்ட காலமாக நடந்து வந்தது. இதனால் அப்போது வாங்கிய பணத்திற்கு, நிறைய மாதங்கள் லலித் வட்டிகட்டி இருந்தார். ஆகையால் தளபதி 67 படத்திற்காக விஜய் மற்றும் லோகேஷ், தலா ரூ.5 கோடி சம்பளத்தை குறைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி, கடைசியாக விக்ரமின் 'கோப்ரா' படத்தை லலித் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார். ஆனால் 'கோப்ரா' படம் படுமோசமான தோல்வியை அடைந்து ஏகப்பட்ட நஷ்டத்தை கொடுத்துள்ளது. விஜய்யின் சொந்தக்காரர் லலித் என்பதால் அவருக்காக சம்பளத்தை குறைத்து தளபதி 67 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Oct 2022 9:12 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!