/* */

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் படத்தின் டீசர் வெளியீடு

Vikram Vedha Hindi - இந்தியில் உருவாகியுள்ள 'விக்ரம் வேதா' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தின் டீசர் வெளியீடு
X

Vikram Vedha Hindi -தமிழில் புஷ்கர் - காயத்ரி இயக்கி நடிகர் விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் ''ஒரு கத சொல்லட்டா சார்'' என்ற விஜய் சேதுபதியின் வசனம் மிகவும் பிரபலமடைந்தது, அவரின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்திய படமாகவும் அது அமைந்தது.

இதனிடையே இந்த படத்தின் இந்தி ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே இந்தியிலும் இயக்கியுள்ளனர். இதில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும் நடிக்க மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழைப் ஜெராக்ஸ் எடுத்தது போலவே இந்தி டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னணி இசை மற்றும் காட்சி அமைப்புகள் கூட தமிழ் படத்தில் இருந்தது போலவே உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த டீசர் தமிழ் நாட்டிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 Aug 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?