/* */

நிஜ வில்லன் ஆக மாறிய சீரியல் நடிகர்

Tamil Serial News- டிவி சீரியல்களில், காட்சிகளை சுவாரசியப்படுத்த வில்லன்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், இங்கு, ஒரு சீரியல் நடிகர், நிஜ வில்லன் ஆக மாறியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

நிஜ வில்லன் ஆக மாறிய சீரியல் நடிகர்
X

tamil serial news -திவ்யா ஸ்ரீதர், அர்னவ் ஜோடி

Tamil Serial News-பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை என்பதை மனிதர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது போலிருக்கிறது. சாதாரண குடும்பங்களை சேர்ந்த மனிதர்களுக்குதான் பொருளாதாரம் சார்ந்த ப்லவேறு பிரச்னைகள் என்றால், புகழ்பெற்ற நடிகர், நடிகையர் வாழ்விலும் பல்வேறு பிரச்னைகள் தொடரவே செய்கிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ, நடிகை மகாலட்சுமியும் தனது கணவரும் நெருக்கமாக இருப்பதாக புகார் அளித்திருந்தார். இது, பரபரப்பாக பேசப்பட்டது. உண்மையில், ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் காதல் இருக்குமோ, என்று பலரும் சந்தேகித்தனர். ஆனால், சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்ட மகாலட்சுமி இந்த பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். பிரச்னைக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதிய நிலையில், மீண்டும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


ஏற்கனவே மகாலட்சுமியுடன் சர்ச்சையில் சிக்கிய ஈஸ்வர், தற்போது மீண்டும் அதே போல் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், பிரபல சீரியல் நடிகரான அர்னவ்வை பதிவு திருமணம் செய்துகொண்டார். திவ்யா ஸ்ரீதர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அதனால் தனது கரு கலைந்துவிடும் என்றும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், கர்ப்பிணி மனைவியை அர்னவ், அடித்து துன்புறுத்துவதாக, வைரலான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆனால், திவ்யாவின் இந்த புகாருக்கு அர்னவ் மறுப்பு தெரிவித்துள்ளார். கணவன், மனைவியாக உள்ள தங்களுக்குள் நடக்கும் சின்னசின்ன சண்டையை கூட, திவ்யா ஊதி பெரிதாக்குகிறார் என்றும் அர்னவ் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஈஸ்வருடன் இணைந்து திவ்யா கருவை கலைக்க போவதாகவும், அதற்காக தான் இத்தனை நாடகங்கள் என்றும் அர்னவ் கூறியுள்ளார்.இவ்வாறு தொடர்ந்து சின்னத்திரை நடிகைகளின் விவகாரத்தில், நடிகர் ஈஸ்வரின் பெயர் அடிபடுகிறது.


ஏற்கனவே, மகாலட்சுமியுடன் ஈஸ்வர் நெருக்கமாக இருப்பதாக, ஈஸ்வரின் மனைவியே புகார் கூறியது, பரபரப்பானது. இப்போது, கர்ப்பமாக இருக்கும் திவ்யா ஸ்ரீதர், ஈஸ்வர் துாண்டுதலால் தன்னிடம் பிரச்னை செய்வதாகவும், இதுபோன்ற நாடகங்களை நடத்துவதாகவும், திவ்யா ஸ்ரீதரின் கணவர் அர்னவ் கூறி இருக்கிறார்.


மேலே உள்ள படத்தில் காணப்படுபவர்தான் ஈஸ்வர். இவர் மீதுதான், மாறி, மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ, மகாலட்சுமியுடன் நெருக்கமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை வைத்தார். தற்போது, திவ்யா ஸ்ரீதர் செய்யும் பிரச்னைகளுக்கு, பின்னணியில் இருப்பது ஈஸ்வர்தான் என்று, திவ்யாவின் கணவர் அர்னவ் புகார் கூறுகிறார்.

சீரியல்களில் வில்லன்கள் இருப்பது சகஜம்தான். ஆனால், சீரியல் நடிகர், நடிகைகளின் வாழ்க்கையில் வில்லனாக ஈஸ்வர் இருப்பது, விசித்திரமாக உள்ளதாக, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 Oct 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?