/* */

சமூக வலைத்தளத்தில் கர்ப்ப கால படங்களை வெளியிட்டார் தமிழ் நடிகை

Serial Actress Abhinavya Pregnant Photoshoot -சமூக வலைத்தளத்தில் தனது கர்ப்ப கால படங்களை சீரியல் மற்றும் தமிழ் நடிகை அபிநவ்யா வெளியிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

சமூக வலைத்தளத்தில் கர்ப்ப கால படங்களை வெளியிட்டார் தமிழ் நடிகை
X

Serial Actress Abhinavya pregnant photoshoot, Sun Tv Serial Actress Abinavyaசின்னத்திரை நடிகை அபிநவ்யா.

Serial Actress Abhinavya Pregnant Photoshoot - தகவல் பரிமாற்றத்திற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இப்போது நடிகர் நடிகைகளின் சொந்த வெறுப்பு வெறுப்புகளை பதிவிடும் ஒரு தளமாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நடிகர் நடிகைகள் மார்க்கெட் பிடிக்கவேண்டும் என்பதற்காக கவர்ச்சிப்படங்கள், தங்களது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள், விழாக்கள், சண்டை சச்சரவுகளையும் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உலகையே தங்கள் பக்கம் பார்க்க வைத்து விடுகிறார்கள்.

Serial Actress Abhinavya pregnant photoshoot, Sun Tv Serial Actress Abinavyaபிரபல நடிகை நயன்தாரா- விக்னேஷ் தம்பதியினர் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பதிவிட்ட படம் மற்றும் செய்திகள் உலக அளவில் வைரலாகி வருகிறது. திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் அவர்கள் எப்படி குழந்தை பெற்று இருக்க முடியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்ற சர்ச்சைக்கு இன்னும் தீர்வு கிடைக்காமல் அது ஒரு பெரிய சட்டப்பிரச்சினையாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் நடிகை ஒருவர் தனது கர்ப்ப கால போட்டோ சூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த நடிகை யார் என்கிற விவரங்களை பார்ப்போமா?


Serial Actress Abhinavya pregnant photoshoot, Sun Tv Serial Actress Abinavyaஅந்த நடிகையின் பெயர் அபிநவ்யா. இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் மற்றும் கண்மணி என்கிற இந்த தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின்னர் இவர் சீரியல் நடிகரான தீபக் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Serial Actress Abhinavya pregnant photoshoot, Sun Tv Serial Actress Abinavyaதீபக் குமார் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடரில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். மேலும் இவர் ஈரமான ரோஜாவே 2 உள்பட ஒரு சில தொடர்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இந்த சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் ஒன்றாக கூடி வாழ்ந்ததன் விளைவாக தற்போது அபிநவ்யா கர்ப்பமாகி உள்ளார். தமிழில் பூமி என்கிற படத்திலும் மேலும் சில படங்களிலும் அபிநவ்யா நடித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் அபிநவ்யா பதிவு செய்துள்ள காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.


Serial Actress Abhinavya pregnant photoshoot, Sun Tv Serial Actress Abinavyaதனது கணவரை கட்டிப்பிடித்த நிலையிலும், தோள் மீது கைபோட்டு கொஞ்சும் நிலையிலும் அவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அபிநவ்யா தற்போது இந்த போட்டோ சூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் அவரது ரசிகர்கள் மூலம் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், பார்க்கும் ரசிகர்கள் அபிநவ்யா- தீபக் குமார் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் வாழ்த்துக்கள் அவர்களுக்கு குவிந்து வருகிறது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Oct 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?