/* */

ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் நடிகர் தனுஷுடன் நடிக்கிறார்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் நானே வருவேன் திரைப்படத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை நடிக்கிறார்

HIGHLIGHTS

ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் நடிகர் தனுஷுடன் நடிக்கிறார்
X

நடிகர் தனுஷ் தனது புதிய படங்களில் வேலையின் கவனமாக இருந்து வருகிறார். அவரது அண்ணனுக்கு பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் தற்பொழுது நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார்.

இவர் மேயாதமான் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தாணுவுடைய 'வி க்ரியேஷன்' தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக இந்துஜா நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தினுடைய போஸ்டர் ஒன்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

செல்வராகவன் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கும் இருக்கின்றது அவரது கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எல்லி அவ்ரம் என்ற நடிகை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது படத்தின் திருப்புமுனையாக இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பதால் அதை யோசிக்க முடியாத படி ரகசியமாக வைத்துள்ளார்கள்இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பாக்கப்படுகின்றது.


இவர் இந்தியாவில் ஹிந்தியில் 2013 இல் வெளியான 'மிக்கி வைரஸ்' படம் மூலம் அறிமுகமாகி 'கிஸ் கிஸ்க்கோ பியார் கருண்' படம் மூலம் பிரபலமானார். தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் 'பாரிஸ் பாரிஸ்' என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சில காரணங்களால் திரைக்கு வரவில்லை. இது ஹிந்தியில் ஹிட்டான 'குயின்' பட தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 March 2022 12:58 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...