சூர்யாவின் மும்பை ஃபிளாட்...! இந்த விலைல ரெண்டு மூணு படம் எடுத்துரலாமே!

மும்பையில் மிகப் பெரிய ஃபிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறார் சூர்யா. இதன் மதிப்பு 68 கோடி ரூபாயாம். 9000 சதுர அடி வரை இருக்கும் இந்த ஃபிளாட், கார்டன் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சூர்யாவின் மும்பை ஃபிளாட்...! இந்த விலைல ரெண்டு மூணு படம் எடுத்துரலாமே!
X

சென்னையிலிருந்து மும்பை சென்ற சூர்யாவின் திட்டம்தான் என்ன என்று ரசிகர்களே குழம்பி போய் இருக்கிறார்கள். முழுவதுமாக மும்பைக்கு சென்று விட்டார் சூர்யா என தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. அங்கு வீடு, ஃபிளாட் என வாங்கி போட்டு அமர்க்களப்படுத்தி இருக்கிறார். இதனால் அவரது மனைவி ஜோதிகா மிகவும் ஹாப்பி. ஆனால் தமிழ் ரசிகர்களோ என்ன சூர்யா தமிழகத்தை விட்டு போய்விட்டாரா என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

தொழில் வளர வளர அதற்கேற்ப நாமும் தொழில் நடக்கும் இடங்களை விரிவு செய்யவேண்டும் என்பது தொழிலதிபர்களின் அறிவுரை. சிறு கிராமத்தில் தொழில் ஆரம்பித்தவர்கள் பின் நகரம், பெருநகரம் என அவர்கள் தொழில் விரிவடைவதற்கு ஏற்ப அனைத்து இடங்களையும் கையாளும் வகையில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு அலுவலகம் அமைப்பார்கள். ஆனால் தமிழ் படங்கள் மட்டுமே நடித்து வரும் சூர்யா ஏன் மும்பைக்கு செல்லவேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இப்போதுதான் அதுகுறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

சூர்யாவுடன் ஜோதிகா இருக்கும் புகைப்படம்

ஹிந்தியில் சில படங்களைத் தயாரிக்கலாம் என்று ஜோதிகாவும் சூர்யாவும் முடிவெடுத்திருக்கிறார்களாம். மேலும் மும்பையில் விமான நிலைய பார்க்கிங் ஏலம் எடுத்திருந்த சூர்யா, மேலும் சில தொழில்களை அங்கிருந்தே மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார்களாம் சூர்யா ஜோதிகா இணையர்.

பாலிவுட்டில் முதலில் தயாரிப்பு பின் நடிப்பு என அங்கும் தனது திறமையைக் காட்டலாம், இனி நடிப்பில் வரும் பெரிய படங்களை ஹிந்தியிலும் வெளியிட்டு லாபம் பார்க்கலாம் என பல கணக்குகளைப் போட்டிருக்கிறாராம் சூர்யா. ஏற்கனவே இவரது உறவினர்களின் தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டூடியோ கிரீன், டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் என இரண்டு பான் இந்தியா தயாரிப்புக்கு வந்துவிட்ட நிலையில், 2டி தயாரிப்பு நிறுவனமும் பாலிவுட்டில் படம் எடுக்க முயன்று வருகிறது.

இதற்காக மும்பையில் மிகப் பெரிய ஃபிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறார் சூர்யா. இதன் மதிப்பு 68 கோடி ரூபாயாம். 9000 சதுர அடி வரை இருக்கும் இந்த ஃபிளாட், கார்டன் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் டிசைன்

சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படாததால் இதனை சூர்யா 42 என்றே அழைக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா பல்வேறு கெட்டப்களில் நடித்து வரும் இந்த படத்தை 10 மொழிகளில் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே இ ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். திஷா பதானி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் தரமானதாக வர வேண்டும் என படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இணையும் படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சூர்யா இணையும் புதிய படமும் உருவாகும் என்று கூறப்படுகிறது. இனிவரும் அனைத்து படங்களையும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் தயாரித்து விளம்பரம் செய்யும் முடிவில் இருக்கிறாராம் சூர்யா.

Updated On: 2023-03-18T09:46:10+05:30

Related News

Latest News

 1. விளையாட்டு
  கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
 2. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 5. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 6. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 7. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 8. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 9. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 10. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்