/* */

இலக்கியா முதல் ஜனனி வரை.. சின்னத்திரையைக் கலக்கி வரும் இளம் கதாநாயகிகள்...!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் கதாநாயகிகள்

HIGHLIGHTS

இலக்கியா முதல் ஜனனி வரை.. சின்னத்திரையைக் கலக்கி வரும் இளம் கதாநாயகிகள்...!
X

இலக்கியா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் இலக்கியா. மதியம் 2 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், இலக்கியா அப்பாவை இழந்து அம்மா, தம்பியை காக்கும் மகளாக இருக்கிறாள். வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறாள். நோய் வாய்ப்பட்ட அம்மாவையும் கல்லூரியில் படிக்கும் தம்பியையும் கொண்ட அவருக்கு திடீரென்று ஒருநாள் வேலை போய்விடுகிறது. அப்படி இருக்கையில் அவளுக்கு திருமண யோகம் யாரால் வேலை போனதோ அவர் வீட்டு பையனையே திருமணம் செய்யுமாறு அமைகிறது.

திருமணத்துக்கு பிறகு அனைவரும் ஹீரோயினை ஆதரித்தாலும், ஹீரோவின் அம்மா (அத்தை) அவளை எதிர்த்து வெளியே விரட்ட நினைக்கிறாள். இருவருக்கும் இருக்கும் பிரச்னையே கதை.

இந்த தொடரில் இலக்கியாவாக நடிக்கும் ஹீமா பிந்துக்கு வயது 27. இந்த சீரியலில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.

இனியா

ஆல்யா மானசா ராஜா ராணி சீரியல் மூலம் மிகப் பெரிய அளவில் வைரலானவர். பிரபலமாகி தமிழகம் முழுக்க அறியப்பட்டவர். இப்போது இவர் சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வருகிறது. இவருக்கு வயது 30.

அக்காள், தங்கை இருவரும் ஒரே வீட்டில் அண்ணன், தம்பி இருவருக்கும் வாக்கப்பட்டு செல்கிறார்கள். ஆனால் புரிதல் இல்லாமல் அக்கா, தங்கையான ஆல்யா மானசா மீது கோபப்படுகிறார். பல விசயங்களிலும் மாமனாருடன் இணைந்து இனியாவுடன் சண்டை செய்கிறார். வேலை போன இனியா சொந்தமாக இட்லி கடை வைத்து பிழைக்க, அதையும் கேலி செய்கிறாள் அக்கா.

எதிர்நீச்சல்

மதுமிதா வயது 28, ஜனனி கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து வருகிறார். தன் தந்தையால் மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆனால் நன்கு படித்த பெண்ணான ஜனனி, ஒரு பெரிய குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறாள். இப்போதுதான் நம் வாழ்க்கையில் ஒளி ஏற்பட போகிறது. தந்தை இத்தனை நாள் அடக்கி ஒடுக்கி வைத்திருந்த நிலையில், இனி சிறகடித்து பறக்க போகிறோம் என நினைக்கையில், அவளுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

அங்கு ஏற்கனவே வாக்கப்பட்டு வந்த 3 பெண்களையும் அடிமைகள் போல நடத்தி வருகிறார்கள். அதனை பொறுக்காமல் ஜனனி வீட்டை விட்டு வெளியேற, அப்பத்தா உபதேசம் கேட்டு நால்வரையும் சேர்த்துக் கொண்டு எதிர்நீச்சல் அடிக்கிறாள் ஜனனி.

அன்பே வா

27 வயதான டெல்னா டெவிஸ் அன்பே வா தொடரில் நடித்து வருகிறார். மிகவும் இளமையான தோற்றத்துடன் இவர் அணிந்து வரும் உடைகள் அதிகம் பேரைக் கவர்கிறது. இளம் பெண்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இந்த சீரியலைத் தொடர்ந்து பார்ப்பதற்கு காரணம் டெல்னா டெவிஸ்தான். கதையைப் பொறுத்தவரை இது கடுப்பேற்றும் பல காட்சிகள் கொண்டது.

மீனா

சன்டிவியில் புதிய தொடராக ஒளிபரப்பாகி வரும் மீனாவில் நாயகியாக வரும் இந்துவுக்கு வயது 26. ஒரு ஊருக்கு வரும் டீச்சர், அந்த ஊரில் பங்காளி சண்டையால் எந்த நல்லதும் நடக்காமல் இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அங்கு தன்னால் முடிந்த ஒவ்வொரு விசயமாக செய்து வருகிறார். இதனால் அவருக்கு வரும் எதிர்ப்புகளை சமாளிக்கிறார்.

புது வசந்தம்

சோனியா சுரேஷ் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு வயது 24.

பிரியமான தோழி

பிரியமான தோழி சீரியலில் நடிக்கும் சாண்ட்ரா பாபுவுக்கு வயது 25. தன் நண்பனின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு பணக்கார குடும்பத்துக்கு மருமகளாக வரும் பவித்ரா, திடீரென தன் கணவனை இழக்க நேரிடுகிறது. இதனால் பல அவமானங்களை சந்தித்து வரும் அவளுக்கு நண்பனும், மாமனாரும் ஆதரவாக இருக்கிறார்கள். ஒரு இக்கட்டான சூழலில் நண்பனான ஆதி, பவித்ராவின் கழுத்தில் தாலி கட்ட, ஆதியின் காதலியான சங்கவி பவித்ராவை நேரடியாக எதிர்க்கிறார்.

Updated On: 6 Sep 2023 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!