/* */

ரத்தன் டாடா பயோபிக் படத்திற்காக மீண்டும் இணையும் சுதா கொங்கரா-சூர்யா

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameரத்தன் டாடா பயோபிக் படத்திற்காக மீண்டும் இயக்குனர் சுதா கொங்கரா-சூர்யா கூட்டணி சேர இருக்கிறார்கள்.

HIGHLIGHTS

ரத்தன் டாடா பயோபிக் படத்திற்காக மீண்டும் இணையும் சுதா கொங்கரா-சூர்யா
X

இயக்குனர் சுதா கொங்கரா- நடிகர் சூர்யா

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.


sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameஉலக அளவில் மிகவும் உயர்ந்த இடத்தில் மட்டுமல்ல பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் டாடா குழுமங்களின் அதிபர் ரத்தன் டாடா. டாடா நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்களை அரசு ஊழியர்களாகவே கருதுவார்கள். அந்த அளவுக்கு டாடா நிறுவனம் தொழிலாளர் மற்றும் ஊழியர் நலனின் அக்கறை காட்டி வருவதாக கூறப்படுவது உண்டு. உப்பு முதல் உருக்கு தொழில் வரை கொடி கட்டி பறக்கும் டாட்டா நிறுவனம் சாப்ட்வேர் துறையிலும் கலக்கி வருகிறது. ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா.

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameசுதா கொங்கரா ஏற்கனவே சூரரைப் போற்று இந்த படத்தை இயக்கினார். இதுவும் ஒரு தொழில் அதிபர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான்.இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் பல விருதுகளை பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் சுதா கொங்கரா இந்திய அளவில் பிரபலமானார் .அந்த வகையில் தற்போது அவர் அடுத்த பயோபிக் படமாக எடுக்க ரத்தன் டாடாவை தேர்வு செய்திருக்கிறார்.

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameசுதா கொங்கரா இந்திய அளவில் பிரபல பெண் திரைப்பட இயக்குனர் ஆவார். அத்துடன் தமிழ் திரை உலகில் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் கதாசிரியராகவும் விளங்கி வருகிறார்.இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கில படமான மித்தர் மை பிரண்ட் சிறந்த ஆங்கில படத்திற்கான தேசிய திரைப்பட விருதை பெற்றது.இவர் தமிழில் பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் ஏழு ஆண்டுகள் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 2016 ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் சாலா காதூர்ஸ் திரைப்படத்தின் வழியாக பாலிவுட்டில் நுழைந்தார்.

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameசுதா கொங்கராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம். அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்த இவர் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பை நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார். தமிழில் இவர் முதலில் இயக்கிய படம் துரோகி. இந்த படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து இந்த படத்தை அவர் இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தமிழில் இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு சூரரை போற்று படத்தை இயக்கி மிகவும் பிரபலமானார்.

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameஇறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சுதா கொங்கரா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்து இருக்கிறார். பல விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்ற அவர் அப்படத்தை தற்போது ஹிந்தியில் படமாக்கி கொண்டிருக்கிறார்.

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameஇதையடுத்து அவர் மீண்டும் தமிழுக்கு எப்போது வருவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவருடைய அடுத்த திரைப்படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அது தான் பிரபல பிசினஸ் மேக்னட் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருக்கிறார் என்பது. அவரின் முந்தைய திரைப்படத்தை காட்டிலும் இந்த பயோபிக் கதைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameஅப்படிப்பட்ட மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியான இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் யார் என்ற ஆர்வமும் அனைவருக்கும் தொற்றியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சூர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இருவர்களின் பெயரும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameஇதில் ஏற்கனவே சூர்யா, சுதா கொங்கராவ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அதனால் மீண்டும் இவர்களின் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இந்த கூட்டணி இணையும் பட்சத்தில் நிச்சயம் சூர்யா தான் இப்படத்தையும் தயாரிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே சுதா கொங்கரா தன் கனவு திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

sudha kongara next movie, Sudha Kongara going to direct Ratan Tata biopic, ratan tata biopic movie hero nameஅதனால் இந்த கூட்டணி விரைவில் உறுதியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர். இருப்பினும் அபிஷேக் பச்சனும் ஒரு சாய்ஸாக இருக்கின்றார். தற்போது இப்படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 23 Nov 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...