/* */

பொங்கலுக்கு வாரிசு, துணிவு மோதல்... நெருக்கடிக்கு ஆளாகும் தியேட்டர்கள்

Pongal 2023 Movies - பொங்கலுக்கு வாரிசு, துணிவு ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதால் தியேட்டர்கள் நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பொங்கலுக்கு வாரிசு, துணிவு மோதல்... நெருக்கடிக்கு ஆளாகும் தியேட்டர்கள்
X

Pongal 2023 Movies - பொங்கலுக்கு வாரிசு, துணிவு ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதால் தியேட்டர்கள் நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வரிசு ஆகிய இரண்டு தமிழ் படங்களும் வரும் ஜனவரி மாதம், பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் மோதும் என்று சில காலமாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரு நாளில் வெளியாகிறது.

ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம், தீபாவளியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு காலம் தாழ்த்தி வந்ததால், கடைசியாக படத்தை பொங்கலையொட்டி களத்தில் இறக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, ஜனவரி 12ம் தேதி அதாவது வியாழன் அன்று வெளியாகும் என பிரபல தமிழக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

vijay varisu ajith thunivu

தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் வெளியாகும் வாரிசு, அதற்கு அடுத்த நாள் வெளியாகிறது. இருப்பினும் இந்த வெளியிடப்பட்ட தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். டோலிவுட்டின் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தெலுங்குப் பேனரால் தயாரிக்கப்பட்டு, எஸ்.எஸ்.தமன் இசையமைக்க வாரிசு ஒரு மல்டி ஸ்டாரர் ஃபேமிலி என்டர்டெய்னர்.

கொள்ளை சம்பவம் மற்றும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவெடுத்த துணிவு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பாங்காக்கில் நிறைவு பெற்றது. இப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் மஞ்சு வாரியர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

varisu vs thunivu

இந்தநிலையில், அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு இடையே நேரடி போட்டி நிலவ உள்ளது. தயாரிப்புக்குழு படத்தை வெளியீடு செய்தாலும், முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள்தான் கூடுதல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இரு உச்ச நடிகர்களுக்கும் சம அளவு தியேட்டர்கள் பகிர்ந்து அளிக்கப்படுமா என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

pongal 2023 varisu thunivu

இதுகுறித்து சமூகவலைதளங்களில், அஜித்தின் துணி படமும், விஜயின் வாரிசு படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது உறுதியான தகவல்தான். ஜனவரி 12 ம் தேதியன்று துணிவும், ஜனவரி 13ம் தேதியன்று வாரிசும் வெளியாகும். இரு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள் கிடைக்கும். அப்படி பாதி பாதி தியேட்டர்களை ஒதுக்குவதே திட்டமாகவும் உள்ளது. இது ஆரோக்கியமான போட்டிதான் என தியேட்டர் உரிமையாளர்கள் கருதுவதாகவும் இது சினிமாவுக்கும் ஆரோக்கியம் என்றும் கூறப்படுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Oct 2022 11:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு