'அடிக்கிறார்' நடிகை புகார் : கணவர் சஸ்பெண்ட்

நடிகையை 2வது திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அடிக்கிறார் நடிகை புகார் :  கணவர் சஸ்பெண்ட்
X

2வது கணவர் வசந்தராஜாவுடன் நடிகை ராதா.

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதி போலீஸ் குடியிருப்பில் வசந்தராஜா(வயது 40) என்பவர் குடியிருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் எண்ணூர் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா. நடிகை ராதாவை சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நடிகை ராதாவுடன் விருகம்பாக்கத்தில் தற்போது வசித்து வருகிறார். இந்த நிலையில், 2வது கணவர் வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக, விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் நடிகை ராதா புகார் கொடுத்தார். பின்னர் இருவருக்குள்ளும் சமரசம் ஏற்பட்டதால், அந்த புகாரை நடிகை ராதா வாபஸ் வாங்கி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நடிகை ராதா கொடுத்த புகார் உண்மைதானா என்பது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, முதல் மனைவிக்கு தெரியாமல் நடிகை ராதாவை ரகசிய திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து அரசு பணியில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சட்டத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டதால் வசந்தராஜாவை சஸ்பெண்ட் செய்து தெற்கு மண்டல இணை கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 19 April 2021 8:06 AM GMT

Related News