/* */

'விடுதலை' பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி; படக்குழு அதிர்ச்சி

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை’ பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம், படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

HIGHLIGHTS

விடுதலை பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி; படக்குழு அதிர்ச்சி
X

திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்து வரும் 'விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியை படமாக்கியபோது ஏற்பட்ட விபத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் உயிரிழந்தார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 'விடுதலை'. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். சென்னை, கேளம்பாக்கத்தில் சண்டை காட்சியை நேற்று படமாக்கிய போது, கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார்.

இறந்த சுரேஷுக்கு மனைவியும், மகளும் இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் கூடுதலாக எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா, இப்படி அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டதே என சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.


விபத்து குறித்து, தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்கள் யூனியன் தலைவர் தவசிராஜ் கூறியதாவது,

குதிக்கும் காட்சி குறித்து சுரேஷ் நடித்துக் காட்டினார். அப்பொழுதுதான் விபத்து ஏற்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் இப்படியாகிவிட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. சுரேஷை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை. சுரேஷ் குடும்பத்திற்கு உதவி செய்வதாக தயாரிப்பாளர்களும், இயக்குநரும் தெரிவித்துள்ளனர். எங்கள் சங்கம் மூலம் நாங்களும் உதவி செய்ய முயற்சிப்போம் என்றார்.

'விடுதலை' படத்தில் சூரி தான் ஹீரோ. இது போலீஸ் படை பற்றிய படமாகும். விஜய் சேதுபதி, இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை தனது 'ரெட் ஜெயின்ட் மூவீஸ்' நிறுவனம் மூலம் விநியோகம் செய்கிறார் உதயநிதி ஸ்டாலின். 'விடுதலை' படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். அவர் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.


'விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து அறிந்தவர்கள், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 பற்றி பேசுகிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியானார்கள், 10 பேர் காயம் அடைந்தார்கள். கமல்ஹாசனும், காஜல் அகர்வாலும் நூலிழையில் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


துணை நடிகர்களில் ஒருவராக துவக்கத்தில் சில படங்களில் நடித்து, 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் பிரபலமான நடிகர் சூரி, காமெடி நடிகர்களில் ஒருவராக வெற்றி பெற்றார். பல படங்களில், ஹீரோவின் நண்பனாக, படம் முழுக்க தனது காமெடி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. தற்போது, அவர் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் 'விடுதலை' படத்தில் நடந்த இந்த துயரச் சம்பவம், நடிகர் சூரியை மிகுந்த வருத்தமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Updated On: 4 Dec 2022 8:07 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!