/* */

அடிக்கடி போட்டோஷூட் நடத்தும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி

srinidhi shetty latest news- சினிமாவில் சினிமா வாய்ப்பு கேட்டு, புகைப்பட ஆல்பங்களுடன் நடிகர், நடிகையர் அலைந்தது அந்த காலம். இப்போது, அவர்களே போட்டோஷூட் நடத்தி, வலைதளங்களில் வைரலாக பரவவிட்டு, ரசிகர்கள் மத்தியில் தங்களது இமேஜை தக்க வைத்துக்கொள்வதோடு, புதிய பட வாய்ப்புகளையும் பெறுகின்றனர்.

HIGHLIGHTS

அடிக்கடி போட்டோஷூட் நடத்தும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
X

srinidhi shetty latest news - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

srinidhi shetty latest photoshoot, srinidhi shetty latest news- கேஜிஎப், கோப்ரா படங்களில் நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இதில், கேஜிஎப் படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால், அந்த படத்தின் ஸ்ரீநிதி ஷெட்டி படவுலகில் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக மாறிவிட்டார். தொடர்ந்து, சியான் விக்ரம் நடித்த, கோப்ரா படத்திலும் கதாநாயகியாக நடித்தார். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் பெரிய வெற்றியை பெறாமல், ஏமாற்றியது.


ஆனால், கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்த கேஜிஎப் சாப்டர் 1 மற்றும் 2 மெகாஹிட் அடித்தது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ் நடிப்பில் இந்தப்படம் கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்து, வெற்றி பெற்றது.


படத்தில் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டேண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதில், ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தின் பார்ட் ஒன்றிலும் நடித்திருந்தார் என்ற போதிலும், அந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்ற கருத்து நிலவியது. அந்த குறையை போக்கும் வகையிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் அவரது நடிப்பு இருந்தது.

சினிமா உலகில் முதல் தகுதியாக நடிகைகளுக்கு அமைவது அவர்களது அழகுதான். கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற 'மிஸ் திவா சூப்ராநேஷனல் போட்டியில்' மகுடம் சூடிக் கொண்டவர் ஸ்ரீநிதி ஷெட்டி. திரை பிரபலங்கள் பலரும் தங்கள் முக அழகிற்காக ஆர்டிபிஷியல் மேக்கப் பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை சார்ந்த அழகுப் பொருட்களை வைத்து, தனது சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து வருபவர் ஸ்ரீநிதி ஷெட்டி..இதுதவிர, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க மாய்ஸ்சரைசிங் டோனர் ஒன்றை பயன்படுத்துகிறார்.


சூரிய ஒளி காரணமாக சருமத்தில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதனை சரி செய்ய, ஸ்ரீநிதி ஷெட்டி தினந்தோறும் விட்டமின் சி சீரம் பயன்படுத்தி வருகிறார். இப்போதும், எப்போதும், சருமத்தை ஈரப்பசையுடன் வைத்திருக்க மாய்ஸ்சரைசிங் லோஷன் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். வெளியிடங்களுக்கு செல்வதற்கு முன்பாக, சூரிய ஒளியில் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க இவர் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ள தவறுவதில்லை. இது தவிர தினசரி இரவில் சருமத்தை சுத்தம் செய்ய எக்ஸ்ப்லோய்டிங் டோனர் ஒன்றை இவர் பயன்படுத்தி வருகிறார்.


சமீபத்தில், போட்டோஷூட் நடத்தி, அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டிருக்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி. அந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த காலத்தில், புகைப்பட ஆல்பங்களுடன், சினிமா வாய்ப்புகளை தேடினர் நடிகர், நடிகையர். இப்போது, சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களே அவர்களுக்கு புதிய பட வாய்ப்புகளையும் பெற்று தந்துவிடும்.

Updated On: 19 Oct 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்