விரைவில் 'வேட்டையாடு விளையாடு-2'..!
நடிகர் கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடுவிளயாடு' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கி, திரைக்கு வரவிருக்கிறது.
HIGHLIGHTS

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசனை நாயகனாகக் கொண்டு, 'வெந்து தணிந்தது காடு' எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை(02/09/2022) சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் மிக பிரமாண்டமாக நிகழ்ந்தேறியது.
இந்த விழா மேடையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 'வேட்டையாடு விளையாடு-2' படத்திற்கான கதையைக் கேட்டு என் சம்மதத்தை இயக்குநர் கௌதமிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால், இடையில் கொரோனா வந்துவிட்டது. எனவே, முழுக்கதை என்னை வந்தடையவில்லை" என்றதும்,
விழா மேடையிலேயே இதற்கு விளக்கமளித்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், எழுத்தாளர் ஜெயமோகன், 'வேட்டையாடு விளையாடு-2' படதிற்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அந்த முழுக்கதையும் எழுதி முடித்தவுடன் அது விரைவில் கமல்ஹாசனைச் சென்றடையும்" என்ற உடனடி பதில் தகவலினைத் தெரிவித்தார்.
இதனிடையே, 'வேட்டையாடு விளையாடு- 2' படத்தின் முதற்கட்ட பணிகளில் இயக்குநர் கௌகதம் வாசுதேவ் மேனன் இருப்பதாகவும், அடுத்த வருடத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.