/* */

அடுத்த படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம்.... அம்மாடியோவ்..!

Sivakarthikeyan Salary-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னேறிய நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கான சம்பளம், கணிசமாக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

Sivakarthikeyan Salary
X

Sivakarthikeyan Salary

Sivakarthikeyan Salary-விஜய் டிவியில் 'அது இது எது' நிகழ்ச்சி தொகுப்பின் வாயிலாக, மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி தொகுப்பாளராக, தனது வாழ்க்கையை துவங்கிய இவரது பயணம், அடுத்த சில ஆண்டுகளில், திடீரென சினிமா பக்கமாக திரும்பியது.

இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில், 'மெரினா' என்ற காமெடி படத்தில், கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின், படிப்படியாக சினிமா வாழ்வில் முன்னேற்றம் கண்டார். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, மான்கராத்தே, வேலைக்காரன் என பல படங்கள், இவரது வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. அதிலும் நர்ஸ் வேடத்தில் இவர், கீர்த்தி சுரேஷூடன் நடித்த 'ரெமோ' படம், பலத்த பாராட்டை பெற்றுத் தந்தது.

இதையடுத்து, டாக்டர் படத்தின் வெற்றி, இவரை இன்னும் பலமடங்கு உயர்த்தியது. நகைச்சுவை கலந்த ஆக்சன் திரைப்படமாக இது, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்தது.

படங்களில் நடித்து வெற்றிக்கனியை தொடர்ந்து பறித்ததால், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களால் பூர்த்தி செய்யவில்லை.

இதை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இதுமட்டுமின்றி புதிய படம் ஒன்றையும் கைவசம் வைத்துள்ளாராம். ஆம், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்திற்கு பின் மற்றொரு புதிய தமிழ் திரைப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயன் ரூ. 27 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சிவகார்த்திகேயன் கேட்டுள்ளாராம்.

ஆனால், இறுதியில் ரூ. 27 கோடி சம்பளம் தான் உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜிஆர், சிவாஜி போன்றோர் நடித்த அந்த காலத்தில், சினிமா படங்களில், முன்னணி நடிகராக இருந்தாலும் சில லட்சங்கள் மட்டுமே சம்பளமாக கிடைக்கும் நிலை இருந்தது. துணை நடிகர்கள், கதாநாயகிகள், காமடெி நடிகர்களின் சம்பளம் சில ஆயிரங்களாகவே இருந்தது. ஆனால், இன்றைக்கு தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் கோடிகளாக உள்ளது.

ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களின் சம்பளம் எப்போதோ ரூ. 100 கோடிகளை கடந்து விட்டது. நயன்தாரா, தனுஷ் போன்றவர்களின் சம்பளம் 30 கோடி ரூபாய் என்கின்றனர். அந்த வகையில், சிவகார்த்திகேயனும், அதிகபட்ச சம்பளம் பெறும் ஒரு நட்சத்திர நடிகராக முன்னேறி விட்டார் என்பது அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயம்தான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 16 April 2024 11:47 AM GMT

Related News