ரஜினிக்காக எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்! பட்ஜெட் ரொம்ப பெருசு...!
சிவகார்த்திகயேன் நடிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் மிகப் பெரியதாக இருக்கும் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்படும் எனவும், இந்த படத்தை தயாரிக்க இரண்டு பெரிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS

ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 171 படத்தில் யார் இயக்கப்போகிறார் என்பதைத் தான் இப்போது இணையதளம் முழுக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். த செ ஞானவேல் இயக்கத்தில் இணைகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு அவர் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை சூப்பர் ஸ்டார் படம் என்பதால் நிச்சயம் இந்த படத்தை மிகப் பெரிய அளவில் செய்துவிட வேண்டும் என நினைத்து வேலை செய்து வருகிறார் நெல்சன் திலீப்குமார்.
இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை அவரது மகளே இயக்குகிறார். அந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோல்தான் செய்ய இருக்கிறார். அதில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். அந்த கதை கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இவர்களை வைத்தே படத்தை எடுத்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தில் அதிக அளவில் கிரிக்கெட் காட்சிகள் வருகிறதாம்.
இந்த படத்தை முடித்துக் கொண்டு வரும் சூப்பர் ஸ்டாரை, பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இவர்கள் தவிர தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரிடமும் கதை கேட்டு வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். முன்னதாக டான் சிபி சக்ரவர்த்தியிடம் கதை கேட்டு அந்த படம் துவங்கும் அளவுக்கு சென்றுவிட்ட நிலையில் திடீரென அவர் படத்தை விட்டு நீக்கப்பட்டார்.
இத்தனை இயக்குநர்களிடம் அடுத்து நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறிவிட்டு அனைவரையும் காத்திருக்க வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இதனால் அப்செட்டில் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும். பிரதீப் ரங்கநாதன் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். தேசிங்கு பெரியசாமியும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
விக்னேஷ் சிவன் அஜித்குமார் 62 படத்திலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து இப்போது இந்த படத்தை இயக்குகிறார். அடுத்து தேசிங்கு பெரியசாமியும் ரஜினிக்கு சொன்ன அதே கதையில்தான் சிம்பு படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் நிராகரித்த அடுத்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம் அதுவும் பெரிய பட்ஜெட் படம். டான் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையில் திருப்தியாகி அவர் படத்தில் நடிக்க ரஜினி சம்மதித்த நிலையில், பின்னர் அந்த கதையை நிராகரித்துவிட்டார். இந்த கதையில் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
சிவகார்த்திகயேன் நடிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் மிகப் பெரியதாக இருக்கும் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்படும் எனவும், இந்த படத்தை தயாரிக்க இரண்டு பெரிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.