/* */

'என் தாத்தா ஒரு மகான், நான் ஒரு சாதாரண மனிதன்' - நடிகர் துஷ்யந்த் ராம்குமார் நெகிழ்ச்சி

Sivaji Grandson- ‘நான் பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும், என் தாத்தா சிவாஜி கணேசன் ஒரு மகான், நான் ஒரு சாதாரண மனிதன்,’ என்று பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ராம்குமார்.

HIGHLIGHTS

என் தாத்தா ஒரு மகான், நான் ஒரு சாதாரண மனிதன் - நடிகர் துஷ்யந்த் ராம்குமார் நெகிழ்ச்சி
X

sivaji grandson dushyanth ramkumar interview-- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் நடிகர் துஷ்யந்த் ராம்குமார்.

Sivaji Grandson தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும் ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் சிவாஜி என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். சினிமாவின் வரலாறு என்றால், அதில் நடிப்புலக சக்ரவர்த்தி 'செவாலியே' சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே என்பதே உண்மை.


இவருடைய மகன் இளைய திலகம் என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபு. இவர் தன் தந்தையைப் போல், நடிப்பில் பல சாதனைகளை புரியவில்லை என்றாலும், தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் இருந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பிரபுவின் மகனும் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

அத்துடன், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவரது மகன் சில படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் அந்த அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை.


இந்நிலையில், சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் ராம்குமார் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

தொடக்கத்தில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு நேரடியாக "சக்சஸ்" படத்தில் நடிக்க வந்துவிட்டேன் படத்தின் பாதியில்தான் 'நடிப்பது எவ்வளவு கடினம்,' என்று தெரிந்தது. படமும் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை, அதற்கு, 'இன்னார் குடும்பத்தை சேர்ந்தவர் நடித்த படம், வெற்றியடையவில்லை,' என்ற சில விமர்சனங்களும் வந்தது. அப்போது வருத்தமாக இருந்தது. அதற்கு பிறகு நான் நடித்த 'மச்சி' படம் வந்தது அப்படம் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தாலும், 'சரியாக பண்ணவில்லையோ' என்ற குற்ற உணர்வு, எனக்கு இருந்தது.

அந்த நேரத்தில், 'ஏன் இந்த உலகத்தில் வாழ்கிறோம், வாழ்க்கையில் எதுவுமே இதுவரை சாதிக்கவில்லையே' என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு பிறகு, சிறிய இடைவெளி விட்டேன், அப்போதுதான் ரஜினிகாந்த என்னுடைய அப்பா ராம்குமாருடன் 'படம் பண்ணலாம்' என்று அழைத்தார்.


சிவாஜி தயாரிப்பு நிறுவனம் அப்போது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். எனவே, அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று தயாரிப்பில் நான் வந்தேன் அது அப்படியே அஜித் நடித்த 'அசல்', டிவி சீரியல்கள் என்று காலம் சென்று விட்டது. பின்னர் ஒரு முறை கமலஹாசன் அவர்களை சந்திக்கும் போது, 'இந்தத் துறையில் பெயர் வாங்குவது மிகவும் கடினம். ஏனென்றால், உங்களுடைய தத்தா சிவாஜியும் சரி, பிரபுவும் சரி, மிகவும் கடினமாக உழைத்தார்கள். எனவே, உங்களுக்கு இரண்டு மடங்கு பொறுப்பு இருக்கிறது,' எனக் கூறினார். அதன் பிறகுதான் நடிப்பு கற்றுக்கொள்ளலாம் என்று சென்றேன். அதன்பிறகு, அப்படியே என் வாழ்க்கைப்பாதை மாறி சென்று விட்டது.

அதற்கு பின்னர், இவ்வளவு ஆண்டுகள் கழித்து என்னுடைய மனைவியின் மூலம்தான் மறைந்த சுஜாதா கதையில் இருந்து மையமாக எடுத்த 'இங்கிலிஷ் தமிழ்' நாடகம். அந்த நாடகம் நன்றாக சென்ற பிறகுதான் என்னுடைய நடிப்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. அதற்கு பிறகு 'அஸ்திரா' என்ற மலையாள படத்தில் நடித்தேன், பின்னர் தமிழில் 'தீர்க்கதரிசி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் பிப்ரவரி மாதம், அந்த படம் வெளியாக இருக்கிறது.


சிவாஜி பேரன் என்பதால், சில இடங்களில் என்னை மட்டும் தனிமைப்படுத்துவது போன்று இருந்தது. 'இவ்வளவு பெரிய வீட்டு பையன், எப்படி பழகுவது' என்று பலரும் நினைப்பார்கள். என்னுடைய தாத்தா ஒரு மகான், ஆனால், நான் ஒரு சாதாரண மனிதன். எனவே, பலரிடம், 'உங்களுடன் பணியாற்றிய சக நடிகர் போல பழகுங்கள்,' என்று பல முறை சொல்லியிருக்கிறேன். இந்த விஷயம் என்னுடைய சித்தப்பா பிரபுவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். என பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ராம்குமார்.







அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 April 2024 4:34 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!