/* */

சூர்யா -ஹரி கூட்டணியில் 'சிங்கம்- 4' வெளிவரப்போகுதுங்கோ

Singam 4 Update -சூர்யா -ஹரி கூட்டணியில் 'சிங்கம் -4' திரைப்படம் வெளிவரப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

HIGHLIGHTS

சூர்யா -ஹரி கூட்டணியில் சிங்கம்- 4 வெளிவரப்போகுதுங்கோ
X
நடிகர் சூர்யா- இயக்குனர் ஹரி

ஹரி இயக்கத்தில் சிங்கம் 4 படம் வெளிவர போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

Singam 4 Update -தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர் ஹரி இயக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.காதல், வீரம், மண்வாசனை என அனைத்து அம்சங்களும் அவரது படத்தில் இருப்பதால் குடும்பத்துடன் சென்று பார்க்கும் மனநிலையும் ரசிகர்களுக்கு கிடைக்கிறது.

அந்த வகையில் இயக்குனர் ஹரி ஏற்கனவே இயக்கிய சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு உள்பட பல படங்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்தன. இயக்குனர் சூர்யாவுடன் இணைந்து கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கம் என்ற ஒரு படத்தை இயற்றினார் இந்த படம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கதையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் நடிகர் சூர்யா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


singam 4 update, singam 4 villain, singam 4 release, singam 4 castஇதனை தொடர்ந்து சூர்யா, ஹரி கூட்டணியில் மீண்டும் சிங்கம் 2 என்ற படத்தை 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கினார். இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சிங்கம் 3 படம் வெளியானது. இந்த படம் சரிவர வரவேற்பு பெறவில்லை. இதனையடுத்து ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் அருவா என்ற ஒரு படம் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அந்த படம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் யானை என்கிற படத்தை தொடர்ந்து மற்றொரு படத்திற்கான வேலையில் ஈடுபட்டுள்ள போதும் சிங்கம் 4 படத்தின் கதை உருவாக்கத்தில் இயக்குனர் ஹரி ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

singam 4 update, singam 4 villain, singam 4 release, singam 4 castமுழுக்கதையையும் தயார் செய்ததும் சூர்யாவிடம் இயக்குனர் ஹரி கதை சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிங்கம் 4 படத்தில் நடிக்க நடிகர் சூர்யாவும் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது நடிகர் சூர்யா, பாலாவின் வணங்கான் சிறுத்தை சிவாவின் சூர்யா 42, வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

singam 4 update, singam 4 villain, singam 4 release, singam 4 castசிங்கம் 3 தோல்வி அடைந்த நிலையில் சிங்கம் 1, சிங்கம்2 வரிசையில் சிங்கம் 4 ஹரி சூர்யா கூட்டணி வெற்றி பெறுமா என்பது ரசிகர்களின் கையில் தான் உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்