/* */

கோடிகள் குடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்: வாய்ப்பை தூக்கி எறிந்த சிம்பு

Simbu Latest News - தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகராக வலம் வரும் சிம்பு ஒரு விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது

HIGHLIGHTS

கோடிகள் குடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்: வாய்ப்பை தூக்கி எறிந்த சிம்பு
X

Simbu Latest News -கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இதில் சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்போது, 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். பத்து தல திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கின்றது

இந்நிலையில் நடிகர் சிம்பு, மதுபான விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார். பன்னாட்டு மதுபான நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரத்தில் நடிக்க சிம்புவை அணுகியிருக்கிறது. தங்களது விளம்பரத்தில் நடிக்க பெரிய ஆஃபர் கொடுத்துள்ளது. ஆனால், சிம்பு அதில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்த விளம்பரத்தில் நடித்தால், சிம்புவே இந்த விளம்பரத்தில் நடித்து விட்டார் என்று ரசிகர்கள் குடிக்கு அடிமையாக விடக்கூடும். ஆகையால் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது என்பதால் சிம்பு மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் சிம்புக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.


ஆனால், இப்போது தான் எல்லாம் சரியாகியுள்ளது, மீண்டும் எதற்கு சர்ச்சை என சிம்பு இந்த விளம்பரத்தை தவிர்த்திருக்கலாம் என ஒரு தரப்பு கூறுகிறது.

பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் மதுபானங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். தமிழ் நடிகைகள் பலரும் இதுபோன்ற நடித்துள்ளனர். படத்தில் நடிப்பதை காட்டிலும் இதுபோன்ற விளம்பரங்களின் மூலம் அதிகளவு கல்லா கட்டி வருகின்றனர்.

முன்னதாக, கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட சில நடிகர்கள் மதுபான விளம்பரங்களில் நடிக்க மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எதுவாக இருந்தாலும் பணத்தாசை இல்லாமல் சிம்பு இந்த மதுபான விளம்பரத்தில் நடிக்காதது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயம் தான்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்