/* */

'பத்து தல' படத்தின் முதல் பாடல் விரைவில் ரிலீஸ்

simbu pathuthala latest news- 'பத்து தல' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இப்படம், வரும் மார்ச் 30ம் தேதி, தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

பத்து தல  படத்தின் முதல் பாடல் விரைவில் ரிலீஸ்
X

simbu pathuthala latest news- சிலம்பரசன் நடித்த ‘பத்து தல’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவருகிறது.

pathuthala first single release date, simbu pathuthala latest news- சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கிய படம் 'பத்துதல'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற மார்ச் 30ம் தேதி 'பத்து தல' படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.


சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பவானி சங்கர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்த 'பத்துதல' படத்தை 'ஸ்டுடியோ ஸ்கிரீன்' நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்துக்கு, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். 'பத்துதல' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவர உள்ளது. இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.மேலும், மார்ச் முதல் வாரத்தில், 'பத்துதல' படத்தின் இசை வெளியீட்டு விழாவை, பிரமாண்டமாக நடத்த, படக்குழு முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை துவங்கியுள்ளது.

'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, வெளியாகும் சிம்புவின் படம் என்பதால், ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.


விஜய், அஜீத் போன்றே இளம் தலைமுறையினர் விரும்பும் நட்சத்திர நடிகர்களில் ஒருவர்தான் சிம்பு. தமிழ் சினிமாவில் 'அஷ்டவதானி' என அழைக்கப்படும் டி. ராஜேந்தரின் மகன் என்பதால், அப்பாவை போலவே, மகனும் திரையுலகில் ஜாம்பவானாக இருந்து வருகிறார். டைரக்‌ஷன் துறையிலும், வெற்றி முத்திரை பதித்து வருகிறார். அந்த வகையில், சிம்பு மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே, தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறது.


இதற்கு உதாரணமாக கடந்தாண்டு வெளியான ' வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவின் நடிப்பு பலத்த பாராட்டை பெற்றது. வேலைவாய்ப்பு தேடி செல்லும் வறுமையான குடும்பத்து இளைஞனின் வாழ்க்கையை பிரதிபலித்தது. ஒரு கட்டத்தில், பிழைப்பு தேடி சென்ற இடத்தில், அடியாளாக மாறி, வில்லனுக்கு பாதுகாவலனாக பல பேரை சுட்டுக்கொல்வார். சூழ்நிலைக் கைதியாக அவர், வழிமாறி செல்லும் தவறான போக்கை தெரிந்தே ஏற்றுக்கொள்வதும், அதற்காக வேதனைப்படுவதும் சிறந்த நடிப்புக்கான பிரதிபலிப்பாக அமைந்தது.


அதே போல, அதற்கு முன்பு வௌியான 'மாநாடு' படமும், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை படமாக அமைந்தது. அதுவும், வித்யாசமான கோணத்தில், இந்த படமும், கதைக்களமும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சொந்த வாழ்க்கையில் தொடர்ந்து காதல் தோல்விகளால் பாதிக்கப்பட்ட சிம்பு, திருமணமும் தள்ளிப்போவதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். எனினும், அவரது படங்கள் வெற்றி பெறுவது ரசிகர்களை உற்சாகமடைய வைக்கிறது.

இந்நிலையில், வருகிற மார்ச் 30ல் 'பத்துதல' படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக, படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Jan 2023 7:13 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்