/* */

simbu new movie update நடிகர் சிம்புவின் புதிய படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறுமா?

simbu new movie update தமிழ் சினிமாவில் பல இளைய கதாநாயகர்கள் இருந்தாலும் அவரவர்களுக்கு ஒரு தனித்திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

simbu new movie update  நடிகர் சிம்புவின் புதிய படங்கள்  எதிர்பார்த்த வெற்றி பெறுமா?
X

simbu new movie update

தமிழ்த்திரையுலகில் 80 களில் பாடல்கள், இசை, டைரக்‌ஷன், தயாரிப்பு என ஒட்டுமொத்த வேலைகளையும் செய்து வெற்றிப்படங்களை தந்த டைரக்டர் டி. ராஜேந்தர்- உஷா தம்பதியின் மூத்த மகன் சிலம்பரசன் ஆவார். அப்பாவைப் போல் நடிப்பிலும் இவர் வெற்றி பெற்றதையடுத்து ஆரம்ப கால கட்டத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சினிமா என்றாலே போட்டிதான். அதற்கேற்ப தற்போது நல்ல கதையம்சம் கொண்டபடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிலம்பரசன். இவருக்கும் ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.தமிழ்த்திரையில் பல இளைய கதாநாயகர்கள் நடித்தாலும் ஒவ்வொருவரின்தனிப்பட்ட நடிப்புகளினால் ரசிகர்கள் பட்டாளத்தினை கவர்ந்து வருகின்றனர். விஜய், அஜீத், தனுஷ், உள்ளிட்டசீனியர்களோடு சிம்புவும் களமிறங்கி அவ்வப்போது ரசிகர்கள் பட்டாளத்துக்கு விருந்தளிக்கிறார்.

அந்த வகையில் இவர் நடித்து 2021 ம் ஆண்டு வெளியான படங்களில் மிகவும் முக்கியமானதாக ஈஸ்வரன் பெரும் எதிர்பார்ப்பை பெறும் என எதிர்பார்த்தனர்.ஆனால் அப்படம் அவ்வளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை போலும். அதேபோல் அரசியல் கதையம்சம் கொண்ட மாநாடு படமும் ஆரம்பத்தில் சுறுசுறுப்பைக் காட்டினாலும் பல நாட்கள் ஓடாததால் ரசிகர்கள் இந்த ஆண்டு சிம்புவின் வெளியாகும் படங்கள் பெரும் வெற்றியை பெற்றுதரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.2022ம் ஆண்டு மகா, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்துதல, உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளார். இதில் மகா படத்தில் ஸ்பெஷல் கேரக்டர் ரோலில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

சிம்புவின் 47வது படம்

simbu new movie updateசிம்புவின் 47 வது படமான வெந்து தணிந்தது காடு படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆவார். இவரது இயக்கத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் சிம்பு. இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் ஆவார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படமானது சிம்புவின் 47 வது படம் ஆகும். இப்படத்தில் சிலம்பரசன், ராதிகாசரத்குமார், சித்தி இட்னானி.நீரஜ் மாதவ், உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

பத்துதல

பத்து தல படத்தின் டைரக்டர் நார்தன்மற்றும் கிருஷ்ணன், சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ள அதிரடி திரரைப்படம்இது .ஞானவேல் ராஜா தன்னுடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்க ஒளிப்பதிவாளர் நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பத்து தல படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக்,ப்ரியா பவானி சங்கர், டீஜெய் அருணாசலம், கலையரசன் உள்ளிட்ட குழுவினர் நடித்துள்ளனர்.

கொரோனா குமார்

simbu new movie updateடைரக்டர் கோகுல் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் நகைச்சுவை படம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் செல்வராகவன். இவரே பாடல்கள் மற்றும்கதை எழுதியுள்ளார். வெற்றிப்படங்களை அளித்துள்ள செல்வராகவன் டைரக்‌ஷனில் சிம்பு நடிப்பதால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை நிச்சயம் பெறும் என்ற எதிர்பார்ப்பில் நடிகர், நடிகையர் செலக்‌ஷன், அமைக்க உள்ளனர்.

ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடிகர்கள் நடித்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்மையில் கமல் நடித்த விக்ரத்தை வெற்றி பெறச்செய்தனர் ரசிகர்கள்.இதுபோல் தமிழக ரசிகர்களின் டேஸ்ட் எப்படி? என்று புரியாமல் டைரக்டர்கள் தவித்து வந்துள்ளனர். சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பைசா செலவு செய்யாத படங்கள் கூட வெற்றிப்படங்களாகியுள்ளன திரை வரலாற்றில். ஆக ரசிகர்கள் எதனை வெற்றி பெறச்செய்வார்கள் என்பது படம் எடுப்பவர்களின் கையில்தான் உள்ளது. இதுதான்இன்றைய தமிழ் சினிமாவின் நிலையும்.

Updated On: 12 Aug 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது