/* */

நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது..!

Vijay New Movie - நடிகர் விஜய் நாயகனாக நடிக்கும் 'வாரிசு' படத்தின் அடித்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

HIGHLIGHTS

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது..!
X

வாரிசு பட போஸ்டர்.

Vijay New Movie -தமிழில் 'தோழா' படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் ராஜு தயாரிக்கும் படம் 'வாரிசு'. நடிகர் விஜய் நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நடிகர் விஜய் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ் ராஜ், குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்கள். குடும்பக் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பாடலை படமாக்குவதோடு தொடங்கியது. பின்பு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அடுத்து, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் அண்மையில் நடந்து முடிந்தது.

இந்தநிலையில், இப்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் நடிகர் விஜய் பங்கேற்றிருக்கிறார். இந்த மாதம் 25ம் தேதி வரை படப்பிடிப்பினை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இது முடிந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் சென்னையில் நடக்கவிருப்பதாக படத்தின் தயாரிப்புத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 July 2022 9:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!