/* */

பேலியோ டயட்டால் பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாண் மனைவி மறைவு..!

Actor Bharath Kalyan Wife'டயட்' என்ற பெயரில் உடல் நலனை பேணுவதாக எண்ணி வழக்கமான உணவை எடுத்துக்கொள்ளாமல் உடல் நலனை பலர் கெடுத்துக்கொள்கின்றனர்.

HIGHLIGHTS

Actor Bharath Kalyan Wife
X

Actor Bharath Kalyan Wife

Actor Bharath Kalyan Wifeபிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரத் கல்யாண் தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் பழம்பெரும் நடிகர் கல்யாண்குமாரின் மகன் ஆவார். பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் பரத் கல்யாண் நடித்துள்ளார்.

சொந்தம், கஸ்தூரி போன்ற தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள பரத் , 90களில் மிகப் பிரபலமான நடிகராக விளங்கினார். தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் 2 வெப் சீரிஸிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, சன் டிவியில் இலக்கியா ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து நடித்து வரும் பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரியதர்ஷினிக்கு 43 வயதுதான் ஆகிறது. இந்த சிறிய வயதில் அவர் இறந்துள்ளதால் திரையுலகினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பிரியதர்ஷினி பேலியோ டயட் மேற்கொண்டதால் சர்க்கரை அதிகமானதாக தெரிகிறது. அதற்காக கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்கள் கோமா நிலையிலும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அவர் இயற்கை எய்தினார். பரத் கல்யாண் மனைவி இறந்த செய்தி கேட்டு சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன், பரத்குமார் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கன்னடத் திரையுலகில் பல படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் சிருங்காரம் என்னும் படத்தில் (2007) ம் ஆண்டு அறிமுகமானவர். பின்னர் யக்கா, பயணம், கோடிகோப்பா 2, மற்றும் பகவத் ஸ்ரீ ராமானுஜா போன்ற கன்னடப் படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தனுஷ் நடித்த சுல்லான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.


இவருடைய நெருங்கிய நண்பரும் நடிகருமான ராஜ்கமல், அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு அதிர்ச்சி செய்தி பலரையும் அதிர்ச்சி செய்துள்ளது. அதாவது 'ரெஸ்டின் பீஸ் டியர் பிரியாமா' (Rest in peace dear priyamma ) என பதிவிட்டு பரத் கல்யாணை தைரியமாக இருப்பதற்கும் அவருக்கு ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தார். மேலும் பரத் கல்யாண் ராஜ்கமல் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

பரத் கல்யாண் தன்னுடைய மனைவி பிரியதர்ஷினியுடன் இணைந்து, பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 6 April 2024 4:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...