/* */

'ஒரு தந்தையாக நான் துன்புறுகிறேன்' ரஜினி உருக்கம்

ஒரு தந்தையாக நான் மிகவும் வருத்தமடைகிறேன் என்று தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து ரஜினி உருக்கமாக கருத்து தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஒரு தந்தையாக நான் துன்புறுகிறேன் ரஜினி உருக்கம்
X

ஐஸ்வர்யா, தனுஷுடன் நடிகர் ரஜினிகாந்த்.

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவால் ரஜினியின் குடும்பம் ஸ்தம்பித்துப்போயுள்ளது உண்மை. ஒரு தந்தையாக,ஒரு தாயாக அவர்கள் வேதனை எப்படியானதாக இருக்கும் என்பதை அந்த வேதனையை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே உணர முடியும்.

இந்த முடிவு தனுஷ்-ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட முடிவாக இருப்பினும்,இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்திருக்கவேண்டியது அவர்களின் கடமை. காதலித்தபோது திருமணம் செய்து வைத்தது பெற்றோர்தானே? சேரும்போது தேவைப்பட்ட பெற்றோர், பிரிவில் மட்டும் தேவை இல்லையா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ள அவர்களின் பெற்றோர்கள் அனுமதித்தனர். தங்கள் குழந்தைகள் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்பதை அறியும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை தனுஷ்-ஐஸ்வர்யா உணர்ந்திருக்க வேண்டும்.

இவர்களின் இந்த சோகமான செய்தியை கேட்டு ரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்தார். அவர் தனது மகள் மற்றும் மருமகனின் முடிவால் மிகவும் துன்பமடைந்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு கோபமாக பதிலளித்த அவர், அவர்களின் முடிவு தன்னை மிகவும் புண்படுத்தி இருப்பதாகவும், ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அதுகுறித்து நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்றும் கூறினார்.

எந்தவொரு தந்தைக்கும் தனது மகள் அத்தகைய முடிவை எடுத்தது மிகவும் வேதனையான விஷயமாகத்தானே இருக்கும். இது இரண்டு பேருக்கிடையிலான விஷயம் மட்டும் அல்ல. தாய், தந்தையுடன் இருக்கவேண்டிய அவர்களின் குழந்தைகளையும் சார்ந்தது. இது குழந்தைகளுக்கு அதிர்ச்சிமிகு பெரிய விஷயம். அவர்களின் மகிழ்ச்சி என்றென்றும் பறி போய்விடும் என்பது மட்டும் உறுதி.

Updated On: 21 Jan 2022 11:20 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்