/* */

சீதா ராமன் சீரியலில் இனி இவருக்கு பதில் இவரா?

சீதா ராமன் தொடரில் நடிக்க புதிய நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரியங்கா நல்காரி

HIGHLIGHTS

சீதா ராமன் சீரியலில் இனி இவருக்கு பதில் இவரா?
X

ரோஜா தொடரின் மூலம் மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆன பிரியங்கா நல்காரி, ஜீ தமிழில் பணிபுரிந்த சீரியல்தான் சீதா ராமன். ஆரம்ப நாளிலிருந்தே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார் பிரியங்கா. அவருக்கு பதில் இனி இன்னொரு நடிகை நடிப்பார் என்று அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்களோ அதற்கு சற்றும் சளைக்காமல் சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

தொலைக்காட்சி தொடர்களில் ஒரு சில தொடர்கள் மட்டும்தான் பல ஆண்டுகள் தாக்குப்பிடித்து மக்கள் மனதில் நிற்கும். அந்த வகையில் ரோஜா சீரியல் சன் டிவியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த சீரியலில் நடித்த அர்ஜூன், ரோஜா கதாபாத்திரங்களை மக்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். அந்த புகழை வைத்து அர்ஜூன் கதாபாத்திரத்தில் நடித்த சிபு சூர்யன் விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க போயிவிட்டார்.

ரோஜா கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா நல்காரி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று சீதா ராமன் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்படுவதால் அவருடனேயே சிங்கப்பூரில் செட்டில் ஆகும் நோக்கில் சீரியலிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.

சீதா ராமன் சீரியலில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க புதிய நடிகை ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஸ்ரீ பிரியங்கா எனும் புது நடிகைதான் இனி சீதா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Updated On: 6 July 2023 6:03 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!