/* */

'பாலிவுட்' படங்களில் 'மண்வாசனை' நடிகை ரேவதி

Salman Khan and Revathi to unite once again in ‘Tiger 3’ after 32 years -மண் வாசனை, மவுன ராகம், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகை ரேவதி, பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தில் நடித்து வருகிறார்.

HIGHLIGHTS

பாலிவுட் படங்களில் மண்வாசனை நடிகை ரேவதி
X

Salman Khan and Revathi to unite once again in ‘Tiger 3’ after 32 years நடிகர் சல்மான் கான் - நடிகை ரேவதி.

Salman Khan and Revathi to unite once again in 'Tiger 3' after 32 years- பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரேவதி, ஏற்கனவே சல்மான் கானுக்கு ஜோடியாகவும் இந்தியில் நடித்துள்ளது பலருக்கும் தெரிந்திருக்காது.

இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சல்மான்கான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரேவதி நடித்து வரும் நிலையில், அவர் என்ன ரோலில் எந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.


பாலிவுட்டின் 'பாக்ஸ் ஆபிஸ் கிங்' கான சல்மான் கான் நடிப்பில், 'டைகர் 3' படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இயக்குநர் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான்கான், கத்ரீனா கைப், இம்ரான் ஹாஸ்மி நடித்து வரும் 'டைகர் 3' படத்தில் ஷாருக்கான் 'கேமியோ' ரோலில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இறுதியில், 'டைகர் 3' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'மண் வாசனை' படம் மூலம் அறிமுகமான நடிகை ரேவதி, 1991ம் ஆண்டு பாலிவுட்டில் சல்மான் கானின் 'லவ்' படம் மூலமாக, ஹீரோயினாக அறிமுகமானார். நடிகை ஸ்ரீதேவியை போலவே, பாலிவுட்டில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சல்மான் கான் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் ரேவதி. 'லவ்' படத்தின் "சாதியா துனே கியா கியா" பாடல் பாலிவுட் ரசிகர்களின் எவர்க்ரீன் பேவரைட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

31 ஆண்டுகளுக்கு முன் ஹீரோயினாக நடித்த ரேவதி, இப்போது சல்மான் கானின் அம்மா ரோலில் எல்லாம் நடிக்கவில்லை. டைகர் மற்றும் டைகர் 2 படங்களில், கிரிஷ் கர்னாட் நடித்து வந்த RAW தலைமை அதிகாரி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். கிரிஷ் கர்னாட் மறைந்த நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரும் எம் கதாபாத்திரம் போல, ஒரு பெண் கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கிய நிலையில், ரேவதியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.


நடிகை ரேவதி ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் சில படங்களை இயக்கி உள்ள நிலையில், தற்போது இந்தியில் மீண்டும் 'சலாம் வெங்கி' என்னும் படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படம் நிறைவடைந்து திரைக்கு வரவுள்ள நிலையில், சல்மான் கானின் 'டைகர் 3' படத்திலும் சூப்பரான ரோலில், கலக்க காத்திருக்கிறார் ரேவதி.

இந்த ஆண்டு 'பூதகாலம்' மற்றும் 'வாரியர்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ரேவதி. முன்னதாக ஓடிடியில் வெளியான 'நவரசா' வெப்சீரிஸிலும் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜோதிகாவின் 'ஜாக்பாட்' படத்தில் காமெடி ரோலில் கலக்கிய ரேவதி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.


கடந்த ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் 'ராதே' படத்தில் நடித்த சல்மான் கானுக்கு அந்த படம் பெரிய பிளாப் ஆக மாறியது. அதன் பின்னர் வெளியான 'ஆண்டிம்' படமும் ஓடவில்லை. சமீபத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த 'காட்பாதர்' படமும் காலை வாரி விட்டது.

இந்நிலையில், 'டைகர் 3' படத்தைத்தான் பெரிதும் நம்பி இருக்கிறார் சல்மான் கான்.

Updated On: 28 Nov 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?