/* */

54 வயதாகியும் முரட்டு சிங்கம் எஸ்.ஜே சூர்யா: கால்கட்டு போட குடும்பத்தினர் திட்டம்

SJ Surya Wife Name -சல்மான்கானுக்கு டஃப் கொடுக்கும் விதமாக 54 வயது நிறைவு ஆகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளமல் இருந்து வருகிறார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா

HIGHLIGHTS

54 வயதாகியும் முரட்டு சிங்கம் எஸ்.ஜே சூர்யா: கால்கட்டு போட குடும்பத்தினர் திட்டம்
X

SJ Surya Wife Name -தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்

ஆரம்பத்தில் எஸ் ஜே சூர்யா. துணை இயக்குனராக தான் பணியாற்றினார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார். அஜித் குமார் நடித்த "ஆசை " படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார். எஸ் ஜே சூர்யா சொன்ன பின் அஜித்திற்கு பிடித்து போக "வாலி " படத்தை " இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது.



அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் .ஜே. சூர்யா, இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா.

கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஆண்டு மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார்.

இந்நிலையில் பாலிவுட்டில் 54 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர் சல்மான் கானுக்கு போட்டியாக இருக்கும் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இதற்காக மணப்பெண்ணை எஸ் ஜே சூர்யா குடும்பத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து எஸ்.ஜே. சூர்யா தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 April 2024 8:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது