/* */

ருத்ரன் படம் எப்படி இருக்கு..?

Rudhran Movie Review in Tamil-ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ருத்ரன் படம் எப்படி இருக்கு?

HIGHLIGHTS

Rudhran Movie Review in Tamil
X

Rudhran Movie Review in Tamil

திரைப்படம்ருத்ரன்
MovieRudhran
மொழிதமிழ்
நடிகர்கள்ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர்
இயக்குநர்எஸ் கதிரேசன்
இசைஜி வி பிரகாஷ்குமார்
தயாரிப்புஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ்
வெளியாகும் நாள்ஏப்ரல் 14, 2023

Rudhran Movie Review in Tamil-கே பி திருமாறன் எழுத்தில் எஸ் கதிரேசன் இயக்கியுள்ள படம் ருத்ரன். பைஃவ் ஸ்டார் கிரியேஷன் சார்பில் கதிரேசனே தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ், வில்லனாக சரத்குமார், ஹீரோயினாக பிரியா பவானி ஷங்கர், மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், சச்சு, ஷிவாஜித், ரெடின் கிங்ஸ்லி, காளி வெங்கட் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

Thiruvin Kural அருள்நிதியின் அடுத்த திரில்லர் ரசிகர்களைக் கவர்ந்ததா?

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் தரண்குமார் இசையிலும், ஜோர்த்தாலே பாடல் OfRo இசையிலும் உருவாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்து கொடுத்துள்ளார் சாம் சி எஸ்.

காஞ்சனா படத்துக்கு பிறகு சரத்குமாரும், ராகவா லாரன்ஸும் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. ஏப்ரல் 5ம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில் ஏப்ரல் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

கதைச் சுருக்கம்

தன் குடும்பத்தை தீர்த்துக் கட்டிய வில்லன்களை பழி வாங்குறதுதான் படத்தோட கதை. பழைய கதைய அரைச்சி வச்சிருந்தாலும் கூட லாரன்ஸின் ஸ்க்ரீன் பிரசென்ஸ் அதையெல்லாம் மறந்துட்டு படத்த பாக்க வைக்குது. தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும் சேர்த்து படத்தை எடுத்திருக்கிறார்கள்.

செண்டிமெண்ட், டான்ஸ், பாட்டு, அம்மா அட்வைஸ்னு எல்லாமே இருக்கு. ஆனா கதை மட்டும்தான் எங்கன்னு தேடிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.

shakuntalam review சாகுந்தலம் படம் எப்படி இருக்கு?

திரைவிமர்சனம்

பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு நல்ல படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட படம் வழக்கமான ஹீரோயின் வந்து செல்லும் படமாகவே இருக்கிறது. அம்மா பூர்ணிமா பாக்யராஜ் சென்டிமெண்ட் சொல்லவே தேவையில்லை. லாரன்ஸ் அதில் பின்னி பெடலெடுப்பார். வில்லனாக சரத்குமார் கச்சிதமான தேர்வு. இவர்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. அதற்கான நேரமும் கொடுக்கப்படவில்லை.

ஆக்ஷன் தெலுங்கு படங்களில் இருப்பது போல கொஞ்சம் ஓவர் டோஸ்தான். ஜிவி பிரகாஷ் புதிதாக என்ன பண்ணியிருக்கிறார் என்பது புரியவில்லை. அவர் ஏன் இந்த படத்துக்கு என்பதும் தெரியவில்லை.

ஒரு நல்ல ஆக்ஷன் எண்டர்டெய்னர் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தராது என்றாலும் சினிமா விரும்பிகள் எதாவது எதிர்பார்த்துக் கொண்டு போனால் ஏமாற்றம்தான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 March 2024 5:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு